Home
Mobile

தீபாவளி பரிசாக ஆப்பிள் ஐபோன்கள்!!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C US மற்றும் சீனா போன்ற நாடுகளில் சென்று 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த புதிய மாடல் ஐபோன்களின் விற்பனை மிகவும் ஜோராக நடந்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக இந்தியாவில் இந்த ஐபோன்களை வெளியிடவில்லை என்றாலும் பல மறைமுக டீல்ர்கள் மூலமாக இவைகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் உள்ள கிரே மார்கெட்டில் புதிய ஐபோன்களின் விற்பனை பரப்பாக நடக்கிறது.

கீரே மார்கெட்டில் இந்த புதிய ஐபோன்கள் மிகவும் அதிக விலையில் விற்க்கப்படுவதால் ஐபோன் ரசிகர்கள் ஆப்பிளின் அதிகாரபூர்வ வெளியீட்டிற்க்காக காத்திருக்கின்றனர். இனிமேல் காத்திருக்க தேவையில்லை , ஆப்பிள் நிறுவனம் தீபாவளி பரிசாக இந்த இரண்டு ஐபோன்களையும் இந்தியாவில் நவம்பர் 1ஆம் தேதி வெளியிட உள்ளது.

ஐபோன் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் தீபாவளி பரிசாகவே இருக்கும். இந்த ஐபோன்களின் சில முக்கிய சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

ஐபோன் 5S ஏ7 சிப் 64 பிட் ஆர்கிடெக்ச்சர் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும். ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

#2

#2

ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான். நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும். பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.

#3

#3

8மொகபிக்சல் கொண்ட ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது. இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.

#4

#4

ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. accelerometer, gyroscope, மற்றும் compass சென்ஸார் போன்றவைகளை ஏ7 பிராசஸரின் உதவி இல்லாமல் இந்த பிராசஸர் பார்த்துக்கொள்ளும்.

#5

#5

ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.

#6

#6


ஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது.

#7

#7

பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாடியை கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.

#8

#8

ஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது. இதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது.

#9

#9

ஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

#10

#10

ஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது. ஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X