ஆப்பிள் ஐபோன் கோல்டன் படங்கள்!!!
ஆப்பிள் ஐபோன் 5S கோல்டன் பேனலுடன் வரும் என்ற தகவலை முன்பே கூறியிருந்தோம் . ஐபோன் 5S, கருப்பு, வெள்ளை மற்றும் கோல்டன் என மூன்று வகையான வண்ணங்களில் வரும் என்ற தகவல்கள் முன்பே வந்துகொண்டிருந்தன.
இவைகளில் கோல்டன் கலரில் வரும் ஐபோனை பற்றிய எதிப்பார்ப்பே மக்களிடம் அதிகம் நிலவுகிறது. மே மாதம் முதல் கோல்டன் ஐபோன் பற்றிய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்பொழுது ஐபோனின் கோல்டன் பேனல்களின் படங்கள் வெளியாகியுள்ளன.
ஐபோன் 5S, 128ஜிபி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியுடன் வரும் என்று ஒரு தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஐபோன் 5S மற்றும் குறைந்த விலை ஐபோனான ஐபோன் 5c ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரஞ்ச் இணையதளமான மேக்போட்டிக் என்ற இணையதளத்தில் ஐபோன் 5Sன் கோல்டன் பேனல்களின் படங்கள் வெளியாகியுள்ளன. கீழே உள்ள சிலைட்சோவில் ஐபோன் 5Sன் கோல்டன் பேனல்களின் படங்களை பாருங்கள்.
ஆப்பிள் ஐபோன் 5S கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் 5S கோல்டன் பேனல்

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் 5S கோல்டன் பேக் பேனல்

ஆப்பிள்
கோல்டன் பேக் பேனல் உட்புறம்

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் 5S கோல்டன் பேனல் சைடு லுக்

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் 5S கோல்டன் பேனல் வால்யூம் பட்டன்
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications