Home
Mobile

பழைய ஐபோனை விட புது ஐபோன்ல என்னதான் இருக்குது!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் குபெர்டினோவில் தனது தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C ஆகிய இரண்டு ஐபோன்களை வெளியிட்டது. ஆப்பிளின் நிறுவனம் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தனது மார்கெட்டை வலுப்படுத்த ஐபோன் 5Cயை குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது.

ஐபோன்களின் அடுத்த புதிய பரிமாணமாக வந்திருக்கிறுது ஐபோன் 5S. இந்த ஐபோன் தன்னுள்ளே பல புதுமையான அம்சங்களை கொண்டுள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ஐபோன் 5S, US, UK, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கபூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவிற்க்கு இது டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 5S 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி என மூன்று வெர்ஷன்களில் வருகின்றன. இந்த ஐபோனில் உள்ள 10 புதுமையான அம்சங்கள் என்ன என்பதை கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்ரபோம்.

ஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5S ஏ7 சிப் 64 பிட் ஆர்கிடெக்ச்சர் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும். ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான். நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும். பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. accelerometer, gyroscope, மற்றும் compass சென்ஸார் போன்றவைகளை ஏ7 பிராசஸரின் உதவி இல்லாமல் இந்த பிராசஸர் பார்த்துக்கொள்ளும்.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

8மொகபிக்சல் கொண்ட் ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது. இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

1.2மெகாபிக்சல் ஹச்டி பிரண்ட் கேமராவை ஐபோன் 5S கொண்டுள்ளது. இதில் BSI சென்ஸார் உள்ளது, இது குறைந்த வெளிசத்தில் படங்களை பிடிக்க உதவும்.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் 4ஜி சேவைகளை பயன்படுத்தலாம். இதில் 13 LTE பேன்டுகள் உள்ளன.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உள்ளது. இது 64 பிட் ஏ7 சிப் உடன் மேலும் போனின் இயக்கத்தை சிறப்பாக்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற ஐபோன்களை விட இதன் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

iWork, iLife மற்றும் iMovie போன்ற அப்ளிகேஷன்கள் ஐபோன் 5Sல் இலவசமாக வருகின்றன.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X