ஆப்பிள் ஐபோன் 5C கலர்புல் படங்கள்!!!
ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி தனது அடுத்த மாடல் ஐபோனை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங்கின் அடுத்த வெளியீடும் செப்டம்பர் மாதத்தில் தான் நடக்கப்போகிறது.
ஆப்பிள் ஐபோன் 5S பற்றி ஏற்கனவே பல தகவல்கள் மற்றும் படங்கள் வெளிவந்துள்ளன. இப்பொழுது ஆப்பிளின் விலை கம்மி ஸ்மார்ட்போனான ஐபோன் 5C பற்றி சில படங்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன் ஒரு சைனீஸ் வெப்சைட்டிலும் மற்றும் சில படங்கள் போன் அரீனா வெப்சைட்டிலும் வெளியாகியுள்ளன. இந்த படங்களை வைத்து பார்க்கும் பொழுது ஐபோன் 5Cக்கும் மற்றும் ஐபோன் 5க்கும் இருக்கும் வித்தியாசம் ஐபோன் 5Cன் பிளாஸ்டிக் பேனலாக தான் இருக்கும் என தெரிகிறது.
ஐபோன் 5C, 4இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் வரும். கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றி வெளியான படங்களில் சிலவற்றை பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள்
கம்மி விலை ஐபோன்

ஆப்பிள்
ஐபோன் 5Cன் பேனலில் உள்ள பட்டன்கள்.

ஆப்பிள்
ஐபோன் 5C பல வண்ணங்களில் வரும்.

ஆப்பிள்
இது இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்
இதில் 1ஜிபி ராம் இருக்கும்.

ஆப்பிள்
பல வண்ணங்களில் ஐபோன் 5C
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications








