குறைந்த விலை ஐபோனின் சிறப்பம்சங்கள்!!!

Written By:

ஆப்பிள் நிறவனம் தனது குறைந்த விலை ஐபோனை சாம்சங், ஹச்டிசி போன்ற நிறுவனங்களின் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளியிட உள்ளது . ஐபோன்5c என்று அழைக்கப்படும் இந்த போன் பற்றி இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலையும் ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை.

ஆனால் ஐபோன் 5c பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகிய வண்ணமே உள்ளன. குறைந்த விலை ஐபோனின் படங்கள் மற்றும் வதந்திகளாக சில தகவல்கள் வெளிவந்தாலும் இதன் சிறப்பம்சங்கள் பற்றிய குறிப்புகள் முழுமையாக வெளிவராமலே இருந்தன.

ஆப்பிள் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

குறைந்த விலை ஐபோனின் சிறப்பம்சங்கள்!!!

சிம் ஒன்லி ரேடார் எனப்படும் டச் வெப்சைட்டில் இப்பொழுது இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன. அதன் படி பார்க்கும்பொழுது ஐபோன் 5c, 4இன்ஞ் ஸ்கிரீன், 1ஜிபி ராம், டியுல்கோர் பிராசஸர், 8மெகாபிக்சல் கேமரா, 1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன்5c ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஐஓஎஸ்7 உடன் வரும். இதன் மொத்தம் 7.6mm மற்றும் எடை 107 கிராம்ஸ் ஆகும். செப்டம்பர் 10ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் 5s உடன் ஐபோன்5c வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதன் வளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் எனலாம்.Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot