ஆப்பிள் ஐபோன்-5வை மிஞ்சுமா கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன்?

தென் கொரிய நிறுவனமான ஐபோன்-5 ஸ்மார்ட்போனை விடவும் கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் சற்று அதிக விலையினை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 130 கிராம் எடையினையும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 112 கிராம் எடையினையும் கொண்டதாக இருக்கும்.
திரையின் அளவிலும், துல்லியத்திலும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை மிஞ்சுகிறது கேல்கஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன். இதில் கேல்கஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 4.65 இஞ்ச் திரையினையும், சூப்பர் அமோலெட் தொடுதிரையினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும், லெட் பேக்லைட் ஐபிஎஸ் கெப்பாசிட்டி தொடுதிரை வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக வழங்கும். மேலும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் மற்றும் கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஏ-6 சிப்செட் மற்றும் கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் சிப்செட்டை வழங்கும். ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும். இந்த புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போன், புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6 ப்ளாட்ஃபார்மில் இயங்கும்.
கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா மற்றும் கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும். மற்றபடி மெயின் கேமராவை பொருத்தவரையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும்.
மெமரி வெர்ஷனை பொருத்த வரையில், இந்த 2 ஸ்மார்ட்போன்களும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. இதில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி வெர்ஷனையும் வழங்கும்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 45,500 விலையில் ஆரம்பமாகும் என்று கருதப்படுகிறது. ஆனால் கேலக்ஸி ப்ரீமியர் ஸ்மார்டபோனின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications