ஆப்பிள் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான ஒப்பீடு!

|

ஆப்பிள் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான ஒப்பீடு!

ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி நோட்-2 டேப்லட் பற்றிய ஒப்பீட்டினை இந்த தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் எளிதாக பெறலாம்.

சமீபத்தில் தான் டேப்லட்டின் வடிவான ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் பற்றிய ஒப்பீட்டினை பற்றி பார்த்தோம். ஆனால் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டாக இருப்பதினால் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் ஆகிய இந்த இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுடனும் எளிதாக ஒப்பிட கூடியதாக இருக்கிறது.

இத்தகைய இந்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 5.5 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதனால் எத்தகைய தகவல்களையும் தெளிவாக பெற, இந்த பிரம்மாண்ட திரை உதவும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான திரை கொண்டதாக இருக்குமா? என்ற கேள்வி நிச்சயம் அனைவரின் மனதிலும் எழும்.

ஐபோன்-5வில் 4 இஞ்ச் திரை வசதியினை சிறப்பாக பெற முடியும். கேலக்ஸி நோட்-2 எலக்ட்ரானிக் சாதனம், ஃபேப்லட்டாக இருப்பதினால் நிச்சயம், ஐபோன்-5 ஸ்மார்ட்போனை விட பெரிய திரையினை கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லை தான்.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டினை விட, ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இலகு எடை கொண்டதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி நோட்-2 180 கிராம் எடையினையும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 112 கிராம் எடையினையும் வழங்கும்.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 5.5 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும் என்பதால் 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பெற முடியும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1136 x 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட சிரி அப்ளிக்கேஷனை பெற முடியும் என்றால், கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் எஸ்-பென் தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் இந்த இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுமே உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்குவதில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொடுப்பதாக இருக்கும். ஐபோன்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை சிறப்பாக வழங்கும். இதனால் ஐபோன்-5

ஸ்மார்ட்போனில் 200 புதிய தொழில் நுட்ப வசதிகளை பெறவும், பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பட்டர் ஃபாஸ்டர், ஸ்மூத்தர், ரீசைஸபில் அப்ளிக்கேஷன் விட்கெட்ஸ் போன்ற வசதிகளை பெற முடியும்.

இந்த 2 எலக்ட்ரானிக் சாதனங்களிலும் 8 மெகா பிக்ஸல் கேமராவின் வசதிகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும், கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 1.9 மெகா பிக்ஸல் கேமராவையும் வழங்கும்.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை சிறப்பாக பயன்படுத்த மைக்ரோஎஸ்டி ஸ்லாட்களை பெறலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய மெமரி வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும்.

ஆனால் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் என்எப்சி தெழில் நுட்ப வசதி கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் கிடைக்கும், ஆனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இந்த வசதி கொடுக்கப்படவில்லை. லித்தியம் அயான் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 8 மணி நேரம் டாக் டைமினையும் பெறலாம். இதில் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி அதிக ஆற்றலை வழங்கும்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் ரூ. 45,500 விலை கொண்டதாக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது. அதே சமயத்தில் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டின் 16 ஜிபி வெர்ஷன் ரூ.39,990 விலை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X