Home
Mobile

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super

எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமானதில் இருந்து, இதனுடன் நிறைய ஒப்பீடுகளை பார்த்தாகிவிட்டது. ஆனால் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட நிறைய ஸ்மார்ட்போன்கள் அடுத்துடுத்து வந்து கொண்டே இருக்கின்றன.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம். 112 கிராம் எடை கொண்ட ஐபோன்-5 ஸ்மார்டனை விட எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் எடை கொஞ்சம் அதிகமாக தெரிகிறது.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் எல்சிடி ஐபிஎஸ் தொடுதிரை வசதியினையும் பெற முடியும். இதன் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையுடன், 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஐஓஎஸ்-6 இயங்குதளம் வசதியினை கொண்டு இயங்கும். ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் குவாட் கோர் என்வீடியா டெக்ரா-3 சிப்செட் மூலம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஏ-6 சிப்செட் வசதியினை வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போன்களில் 8 மெகா பிக்ஸல் ஐசைட் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம். ஐபோனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வெர்ஷன் கொண்ட மெமரி வசதிகளை பெறலாம்.

ஆனால் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வசதி கொண்ட ஃப்ளாஷ் மெமரி வசதியினை பெறலாம். பேட்டரி வசதியினை பொருத்த வரையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 8 மணி நேரம் டாக் டைம் வசதியினை கொடுக்கும் லித்தியம் பாலிமர் பேட்டரியினையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 எம்ஏஎச் பேட்டரியினை வழங்கும் லித்தியம் அயான் பேட்டரி 8 மணி நேரத்திற்கும் கொஞ்சம் அதிகமான டாக் டைமினை அளிக்கும் என்று கருதப்படுகிறது. ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரூ. 50,000 விலை கொண்டதாக இருக்கும். எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 36,099 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X