ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
|

ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
வருகிற 21ம் தேதி அமெரிக்கா ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், இது பற்றிய ஒரு ஒப்பீட்டினை பார்ப்பது நல்லது. இதனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறந்த வசதிகள் இருக்கின்றன என்பதையும் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

இதற்காக இங்கே ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் சிறந்த ஒப்பீடு வழங்கப்படுகிறது.

இலகு எடை கொண்ட ஐபோன்-5:

ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனையும் விட, ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைந்ததாக இருக்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பற்றி வெளியான தகவல்களில் இலகு எடை கொண்ட ஸ்மார்ட்போனாக ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இருக்கும் என்ற செய்தி தான் முதலில் வெளியானது. இலகு எடை என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 140 கிராம் எடை கொண்டதாகவும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 112 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். இதனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கையில் வைத்து இயங்குவதற்கு கச்சிதமாக இருக்கும்.

கிளாஸ் மற்றும் அலுமினியம் கொண்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் வெளிப்புற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளாக்/ஸ்லேட் மற்றும் வைட்/சில்வர் ஆகிய வண்ண கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரை வசதி:

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனது திரையினை ஒப்பிட்டு பார்க்கையில், ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் திரை கொஞ்சம் பெரியதாகவே இருக்கும். இது மட்டும் அல்லாது இந்த ஸ்மார்ட்போனின் திரை துல்லியம் அதிகமாகவே இருக்கிறது. இந்த புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 1136 X 640 திரை பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையினை வழங்கும். இதனால் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் 960 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்களில் லெட் ஐபிஎஸ் கெப்பாசிடிவ் திரை தொழில் நுட்பத்தின் மூலம் தகவல்களை தெளிவாக பெறலாம். இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் எப்படி ஒரே திரை தொழில் நுட்பம் உள்ளது அதே போல இந்த ஸ்மார்ட்போன்கள் கொரில்லா திரை பாதுகாப்பு கவசத்தினை கொண்டதாக இருக்கும்.

சிப்செட் ஆற்றல்:

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப்பிள் ஏ-6 சிப்செட் பற்றி நிச்சயம் பார்க்க வேண்டும். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப்பிள் ஏ-5 சிப்செட்டை விடவும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப்பிள் ஏ-6 சிப்செட் அதிக ஆற்றலை அளிக்கும்.

ஐஓஎஸ்-5 இயங்குதளம்:

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் ஐஓஎஸ்-5 இயங்குதளத்தின் மூலம் நிறைய வசதிகளை பயன்படுத்த முடிந்தது. ஆனால் இதை விட மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கும். இந்த புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் 200 புதிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐபோன்களின் கேமார ஒப்பீடு:

இரண்டு ஸ்மார்ட்போன்களின் மெயின் கேமராவும் ஒரே பிக்ஸலை வழங்கும். ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்களில் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். இதில் ஆட்டோ ஃபோக்கஸ் வசதி, ஜியோ டேகிங் வசதி, டச் ஃபோக்கஸ், ஃபேஸ் டிடெக்ஷன் வசதி போன்ற சவுகரியங்களை பெறலாம். அதோடு இந்த ஸ்மார்ட்போன்களின் கேமராவில் 1080பி துல்லியத்தில் வீடியோவினை பெறலாம். ஒரு நொடிக்கு 30 ஃப்ரேம்களை இந்த கேமரா வழங்கும்.

இது மட்டும் அல்லாமல் வீடியோ காலிங் வசதிக்கு ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும், ஐபோன் 4-எஸ் விஜிஏ முகப்பு கேமராவினையும் பயன்படுத்தலாம். ஐபோன் 4-எஸ், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று விதமான மெமரி வெர்ஷனைகளை வழங்கும்.

பேட்டரி வசதி:

இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்டான்-பை டைமில் சில வித்தியாசங்கள் காணப்படுகிறது. இதனால் இதன் பேட்டரி பற்றி பார்க்கலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் லித்தியம் பாலிமர் பேட்டரியின் மூலம் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 1,432 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மணி நேரம் டாக் டைமினை பெறலாம்.

டிக்ஷனரி எவ்ரிவேர், ஐக்ளவுடு ஸ்டோரேஜ், நியூஸ்டேன்டு, புதிய கேமரா அப்ளிக்கேஷன், புதிய கேம் சென்டர்கள், டீப்பர் ட்விட்டர், ஃபேஸ்புக் இன்டகிரேஷன் ஆகிய வசதிகளை ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பெறலாம். ஆப்பிளின் புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போன் நமது நாட்டில் அறிமுகமான பின்பு இதன் விலை பற்றிய ஒப்பீடுகளை பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X