புதிய ஐபோனில் நவீன வசதிகளை செட் செய்யும் வழி!
ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள சில தகவல்கள். ஐபோன்-5 போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் ஸ்மார்ட்போனில் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
அது மட்டும் அல்லாமல் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் நிறைய சிறந்த அப்ளிக்கேஷன்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம். அதிக விலை கொண்ட இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இதற்கு பிரத்தியேகமாக ஃபைன்டு மை ஐபோன் என்ற அப்ளிக்கேஷன் மிகவும் உதவும். இதன் மூலம் ஐபோனை தவறவிட்டிருந்தால் கூட ட்ரேஸ் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த ஆன்லைனில் ஐக்ளவுடில் அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் ஈஸி ரிட்ரைவல் என்ற வசதியின் மூலம் எளிதாக
தொலைந்த ஐபோனை கண்டெடுக்க முடியும்.
புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களை எளிதாக பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், ட்விட்டரை நேரடியாக லாகின் செய்து கொள்ளலாம். ஐபோனில் இமெயில் வசதியினையும் எளிதாக செட் செய்து கொள்ளலாம். இதற்கு செட்டிங்ஸ் அப்ளிக்கேஷனை, பயன்படுத்தி புஷ் என்ற வசதியின் மூலம், பழைய இமெயில்கள் புதிய ஐபோனில் எளிதாக லோடு செய்யப்படும்.
இப்படி விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில், தேவையான வசதிகளை செய்து கொள்ள தொழில் நுட்ப ரீதியில் புதிய வசதிகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications
