4 மாடல்கள்.. 12 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்.. iPhone 17 முதல் iPhone 17 Pro Max வரை.. இந்தியாவில் எவ்வளவு விலை?
ஒருவழியாக ஐபோன் 17 சீரீஸ் அறிமுகமாகி விட்டது. எதிர்பார்த்தபடியே ஐபோன் 17 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக ஐபோன் ஏர் (iPhone Air) என்கிற முற்றிலும் புதிய அல்ட்ரா ஸ்லிம் மாடல் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக இது ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எந்த நம்பரும் இல்லாமல் ஐபோன் ஏர் என்கிற பெயரின்கீழ் வந்துள்ளது. ஆக டெக்னீக்கல் ஆக இதை ஐபோன் 17 சீரிஸ் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆனாலும் ஐபோன் 17 சீரீஸ் உடன் அறிமுகமானதால் இதை இந்த சீரீஸின் ஒரு பகுதியாக குறிப்பிட்டு பேசுவதே வசதியாக இருக்கும்.

ஐபோன் 17 மற்றும் ஐபோன் ஏர் உடன் சேர்ந்து ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 4 மாடல்கள். இந்த மாடல்களும் மொத்தம் 12 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். எந்தெந்த மாடலின் எந்தெந்த ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:
ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஐபோன் ஏர் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- ப்ரோமோஷன் (ProMotion) ஆதரவு
- 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷன்
- ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே
- ஆப்பிளின் ஏ19 சிப்செட்
- டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமரா
- முன்பக்கத்தில் 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா
- சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ்
- 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.
ஐபோன் ஏர் முக்கிய அம்சங்கள்:
- இசிம்-ஒன்லி ஆதரவு
- 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஏ19 ப்ரோ சிப்செட்
- சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா
- 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது.
- ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்
- 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ்


Click it and Unblock the Notifications








