iPhone 17 Pro அறிமுகம்.. திரும்பி பார்க்க வைத்த Apple.. பெரிய பேட்டரி.. ப்ரோ கேமரா சிஸ்டம்.. மிரள விட்டாச்சு!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) அறிமுகம் செய்யப்பட்டது. ப்ரோமோஷன் ஓஎல்இடி டிஸ்பிளே, ஏ19 ப்ரோ சிப்செட், 18 எம்பி செல்பீ கேமரா போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் லுக்கில் ஒட்டுமொத்த ஆப்பிள் பிரியர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த ஐபோன் 17 ப்ரோ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் அலாய் மற்றும் வேப்பர் சேம்பர் கொடுக்கிறது. செராமிக் ஷீல்டு 2 புரொடக்சன் கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாக டிசைனில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. ஈசிம் (eSIM) கிடைப்பதால், பெரிய பேட்டரியை பேக் செய்துள்ளது. ஆப்பிள் மாடல்களிலேயே பெரிய பேட்டரியாக இது இருக்கிறது. அதேபோல ப்ரோ கேமரா சிஸ்டம் இதில் கிடைக்கிறது.

ஐபோன் 17 ப்ரோ அம்சங்கள் (iPhone 17 Pro Specifications): 6.3 இன்ச் (பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவில் ப்ரோமோஷன் (ProMotion) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மாடலாகும்.மொத்தமாக செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடக்சன் கிடைக்கிறது.
256 ஜிபி ஸ்டோரேஜ், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. சிக்ஸ் கோர் ஏ19 ப்ரோ (Six Core A19 Pro) சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டிக்காக என்1 (N1) சிப் கிடைக்கிறது. 48 எம்பி ப்யூஷன் மெயின் கேமரா + 48 எம்பி ப்யூஷன் அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி ப்யூஷன் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
4X ஜூம் மற்றும் 8X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. போட்டானிக் என்ஜின், டால்பி விஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதுபோக ப்ரோரெஸ் ராவ் (ProRes RAW) கோடெக் பீச்சர்கள் கிடைக்கின்றன. ப்ரோ வீடியோ (Pro Video) பீச்சர் கிடைக்கின்றன. இந்த பீச்சரில் சினிமா-கிரேடு அவுட்புட் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவிக்கிறது. 18 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இந்த செல்பீ ஷூட்டரில் டூயல் கேப்ச்சர் வீடியோ, அல்ட்ரா ஸ்டெபிலைஸ்டு வீடியோ மற்றும் சென்டர் ஸ்டேஜ் வீடியோ கால்கள் மற்றும் போட்டோகள் கிடைக்கின்றன. ஐஓஎஸ் 26 (iOS 26) கிடைக்கிறது. இதில் லிக்விட் கிளாஸ் (Liquid Glass), கால் ஸ்கிரீனிங் (Call Screening) போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆப்பிள் இன்டலிஜன்ஸ் (Apple Intelligence) கிடைக்கிறது.
ஆகவே, விசுவல் இன்டலிஜன்ஸ் (Visual intelligence), லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation) மற்றும் கிளீன் அப் (Clean Up) உள்ளிட்ட பீச்சர்களையும் பெற்று கொள்ளலாம். 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,34,900ஆக இருக்கிறது. 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.154900ஆகவும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,74,900ஆகவும் இருக்கிறது.

செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஐபோன் 17 ப்ரோ மாடலில் சில்வர் (Silver), காஸ்மிக் ஆரஞ்ச் (Cosmic Orange) மற்றும் டீப் ப்ளூ (Deep Blue) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. வேப்பர் சேம்பர், டைட்டானியம் யுனி பாடி போன்ற டிசைன் மற்றும் சிப்செட், பேட்டரியில் அப்கிரேட் கிடைக்கிறது.
மேற்கண்ட பீச்சர்களுடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) கிடைக்கிறது. ஆனால், இதில் 6.9 இன்ச் டிஸ்பிளே கிடைக்கும். அதேபோல 2 டிபி வரையில் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த மாடல்களுடன் ஐபோன் 17 (iPhone 17) மற்றும் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) போன்ற மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை அடுத்தடுத்த செய்திகளில் வெளியிடுகிறோம்.


Click it and Unblock the Notifications