Home
Mobile

ஆபர்ல கிடைக்குதுனு இந்த ஆகஸ்டில் எந்த ஐபோனும் வாங்கிடாதீங்க.. iPhone 17 வெளியீட்டு தேதி வந்துடுச்சி!

எல்லோருக்கும் தெரியும் - ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்கள் ஆனது எப்படியும் செப்டம்பர் 2025 இல் அறிமுகமாகி விடும் என்று! ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் கிடைக்காமலேயே இருந்தது. இதற்கிடைல் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை எப்போது அறிமுகம் செய்யலாம் என்கிற தேதி, ஜெர்மன் தொழில்நுட்ப தளமான ஐபோன் டிக்கர் வழியாக லீக் ஆகியுள்ளது.

அதன்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஐபோன் 17 சீரிஸின் வெளியீட்டு நிகழ்விற்கான தேதி ஆனது ஜெர்மனியில் உள்ள செல்போன் கேரியர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மார்க்கெட்டிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளை தயாரிப்பதற்காக முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

iPhone 17 வெளியீட்டு தேதி வந்துடுச்சி!

லீக் ஆன செப்டம்பர் 9 என்கிற தேதி ஆனது ஆப்பிளின் வழக்கமான வெளியீட்டு முறைகளுடன் ஒத்துப்போகிறது. இந்நிறுவனம் பொதுவாக செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தான் அதன் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும். ஆக செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகி, செப்டம்பர் 12 ஆம் தேதி ப்ரீ-ஆர்டர் தொடங்கி, செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்? இந்த நிகழ்வில் 4 புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் முற்றிலும் புதிய ஐபோன் 17 ஏர் மாடல் - இது முந்தைய பிளஸ் வேரியண்ட்டை மாற்றும் என்றும், இது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 ஏர் மாடலின் அறிமுகம் ஆனது ஆப்பிளின் தயாரிப்பு உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கும். இது செயல்திறனில் சமரசம் செய்யாமல் மெலிதான, இலகுரக ஐபோன் மாடலை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளது. இதோடு ஆப்பிள் நிறுவனம் இன்னொரு மாற்றத்தையும் செய்யலாம். ஆப்பிள் அதன் வருடாந்திர வெளியீட்டு சுழற்சியை மாற்றக்கூடும் என்ற வதந்திகளும் உள்ளன.

அதாவது ஐபோன் 17 சீரீஸ்-க்கு பிறகான மாடல்கள் ஆனது இதுவரை வெளியானது போல ஒன்றாக, ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படாமல், பிரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ப்ரோ மாடல்கள் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும். ஐபோன் எஸ்இ அல்லது இதைபோல் ஏர் போன்ற ஸ்டாண்டர்ட் மாடல்கள் அல்லது என்ட்ரி லெவல் மாடல்கள் வசந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

இது உண்மையாகும் பட்சத்தில், 2025 ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் தான் அனைத்து முக்கிய மாடல்களுக்கும் ஒன்றாக, ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவது கடைசியாக இருக்கும். செப்டம்பர் 9 நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிகழ்வில், புதிய ஐபோன்களுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் இன்னும் அதன் ஐபோன் 17 சீரீஸின் அதிகாரப்பூர்வமாக தேதியை உறுதிப்படுத்தவில்லை. ஆக நமக்கு கிடைத்த செப்டம்பர் 9 என்கிற தேதியை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த தேதி - ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வு வரலாற்று உடன் ஒத்துப்போகிறது - அதுதான் இதை நம்புவதற்கான ஒரே காரணம் ஆகும்.

வரும் வாரங்களில், ஐபோன் 17 சீரீஸ் அறிமுகத்திற்கான ஊடக அழைப்புகள் மற்றும் உறுதியான விவரங்கள் ஆப்பிள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, ஐபோன் ரசிகர்கள் தங்கள் காலண்டர்களில் செப்டம்பர் 9 என்கிற தேதியை ஐபோன் 17 சீரீஸ்-க்கான வெளியீட்டு தேதியாகி "தற்காலிகமாக" குறிக்கலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 17 iPhone 17 Air Launch Date Leaked Its September 9 What We Can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X