Home
Mobile

Apple பரிதாபங்கள்.. வாயில் போட்டு மெல்ல புது அவல்.. 2900mAh பேட்டரி புது iPhone.. அங்க 8000mAh போய்ட்டாங்க!

ஆன்லைன் வாசிகள் மற்றும் ஆப்பிள் ரசிகர்கள் வாயில் போட்டு மெல்ல புது அவல் ஒன்று கிடைத்துள்ளது. "ஒருபக்கம் என்னான்னா.. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எல்லாம் 8000mAh பேட்டரி, 10000mAh பேட்டரினு போய்கிட்டே இருக்கானுங்க.. இந்த ஆப்பிள் என்னான்னா 2,900mAh பேட்டரியுடன் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய போகுதாம்மே.. அது உண்மையா?" என்கிற பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.

அந்த மாடல் - ஐபோன் 17 ஏர் (iPhone 7 Air) ஆகும். பொதுவாகவே ஆப்பிளின் புதிய மாடல்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகத்தான் இருக்கும். இந்த முறை, அதாவது ஐபோன் 17 சீரிஸ் மீது ரொம்பவே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் ஐபோன் 17 சீரீஸில் முற்றிலும் புதிய ஐபோன் 17 ஏர் என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apple பரிதாபங்கள்.. வாயில் போட்டு மெல்ல புது அவல்.. 2900mAh பேட்டரி!

இது ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக மிகவும் ஸ்லிம் ஆன அல்லது மிகவும் எடை குறைவான மாடல் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான எல்லா லீக்ஸ்களுமே ஐபோன் 17 ஏர் ஆனது மிகவும் தீவிரமான ஸ்லிம் டிசைனை கொண்டிருக்கும் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகின்றன; ஆனால் எவ்வளவு ஸ்லிம் ஆக இருக்கும் என்பதை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

அந்த விவரங்கள் - சமீபத்தில் ஆன்லைனில் லீக் ஆன ஐபோன் 17 ஏர் மாடலின் பேட்டரி புகைப்படம் வழியாக வெளிப்படுத்தப்பட்டுளனது. கொரிய பிளாக் ஆன நேவர் வழியாக ஐபோன் 17 ஏர் மாடலின் பேட்டரி என்று கூறப்படும் புகைப்படம் ஆனது ஐபோன் 17 ப்ரோவின் பேட்டரியுடன் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது.

அதன்படி ஐபோன் 17 ஏர் மாடலின் பேட்டரி ஆனது 2.49 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் இது அசாதாரணமான எல்-ஷேப்டு வடிவமைப்பை கொண்டுள்ளது. இது பேட்டரிகள் பொதுவாக எப்படி இருக்கும் என்பதிலிருந்து வேறுபடுகிறது என்றும் நேவரின் பிளாக் கூறுகிறது. இந்த பேட்டரி எவ்வளவு மெலிதாக உள்ளதென்றால்.. ஐபோன் 17 ப்ரோவிற்காக வடிவமைக்கப்பட்ட [பேட்டரி ஒன்றுடன் ஒப்பிடும் போது, அதன் தடிமனில் பாதிக்கும் குறைவாக இருக்கிறது

மேலும் புகைப்படத்தில் உள்ள இரண்டு பேட்டரிகளும் எஃகு உறைகளை கொண்டுள்ளது போல் தெரிகிறது; இருப்பினும், இந்த தகவலை நாம் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், ஏனெனில் ஐபோன் 17 ஏர் மற்றும் ஐபோன் 17 ப்ரோ ஆகிய 2 மாடல்களுமே இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை; குறிப்பாக ஐபோன் 17 ஏர் மாடல் வருமா என்பது கூட 100% உறுதி இல்லை.

ஆனாலும், இந்த லீக் வழியாக ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது எவ்வளவு மெல்லியதாக இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஐபோன் 17 ஏர் ஆனது ஆப்பிளின் மிக மெல்லிய ஐபோனாக இருக்கும் என்றும், இது 5.5 மிமீ முதல் 5.8 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும், சிலர் இது 6 மிமீக்கு குறைவாக இருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன் சுமார் 2,900mAh பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிச்சயமாக இது பெரிய பேட்டரி அல்ல.

ஐபோன் 17 சீரீஸ் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஐபோன் 17 சீரீஸ் ஆனது 2025 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 17 Air Battery Leak Could Be Around 2900mAh To Reach Less Than 6mm Slim Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X