எது பெருசுனு பார்ப்போமா... ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ.. கேமரா, பேட்டரி, விலை.. எதுல எது பெஸ்ட்?
இந்திய மார்கெட்டே மிரளும்படியான பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த மிட்-பிரீமியம் போனுக்கு நிகராக ஏற்கனவே ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 16இ (iPhone 16e) வெளியாகிவிட்டது. இந்த டாப் வேரியண்ட்களில் எது பக்காவான மாடலாக இருக்கிறது. கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, ஓஎஸ், ஏஐ பீச்சர்கள் மற்றும் விலை உள்ளிட்ட அனைத்தையும் அலசி ஆராய்ந்து பார்ப்போம். இறுதியில் எது பெஸ்ட் என்பது உங்களுக்கே தெரிந்துவிடும்.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ டிஸ்பிளே (iPhone 16e Vs Pixel 9a Display):
ஐபோன் 16இ: செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இது வழக்கமான சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாகும். இதில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

கூகுள் பிக்சல் 9ஏ: கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த எச்டிஆர் (HDR) டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ பேட்டரி (iPhone 16e Vs Pixel 9a Battery):
ஐபோன் 16இ: வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கிறது. கியூஐ சார்ஜிங் (Qi Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேக்கப் 3ஆவது ஜெனரேஷன் ஐபோன் எஸ்இ மாடலை விட அதிகமாகும்.
கூகுள் பிக்சல் 9ஏ: 23W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. பெரிய 5100mAh பேட்டரி வருகிறது. பேட்டரி சேவர் மோடில் (Battery Saver Mode) 100 மணி நேரங்களுக்கு (4 நாட்களுக்கு மேல்) பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஹெவி யூசேஜ் மோடில் 30 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ கேமரா (iPhone 16e Vs Pixel 9a Camera):
ஐபோன் 16இ: 48 எம்பி வை-ஆங்கிள் கேமரா மட்டுமே வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, 4K ரெக்கார்டிங் (டால்பி விஷன்), 2X டெலிபோட்டோ ஜூம் மற்றும் போட்டானிக் என்ஜின் (Photonic Engine) கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9ஏ: 48 எம்பி மெயின் கேமரா (சாம்சங் ஜிஎன்8 சென்சார்) + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார்) வருகிறது. ஓஐஎஸ் + ஈஐஎஸ் டெக்னலாஜி உள்ளது. 8X ஜூமிங், 4K ரெக்கார்டிங் வருகிறது. 4K ரெக்கார்டிங்குடன் 13 எம்பி செல்பீ (சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார்) உள்ளது
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ சிப்செட் (iPhone 16e Vs Pixel 9a Chipset):
ஐபோன் 16இ: சிக்ஸ்-கோர் ஏ18 3என்எம் (Six-Core A18 3nm) சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 18 (iOS 18) கிடைக்கிறது. மேலும், 4 கோர் ஜிபியு (GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) வருகிறது. 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளன.
கூகுள் பிக்சல் 9ஏ: ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் கிடைக்கிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் + பீச்சர் ட்ராப் அப்டேட் உள்ளது. இந்த கூகுள் பிக்சல் 9ஏ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளது.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ ஏஐ பீச்சர்கள் (iPhone 16e Vs Pixel 9a AI Features):
ஐபோன் 16இ: ஆப்பிள் இன்டலிஜன்ட்ஸ் (Apple Intelligence), சிரி அசிஸ்டன்ட் (Siri Assistant) கிடைக்கிறது. ஏஐ ரைட்டிங் டூல்ஸ் (AI Writing Tools), ஜென்மோஜி (Genmoji), இமேஜ் பிளேகிரவுண்ட் (Image Playground), இமேஜ் வாண்ட் (Image Wand), கிளீன் அப் (Clean Up) போன்ற பீச்சர்கள் உள்ளன.
கூகுள் பிக்சல் 9ஏ: ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant) கிடைக்கிறது. மேஜிக் எடிட்டர் (Magic Editor), மேஜிக் எரைசர் (Magic Eraser), பெஸ்ட் டேக் (Best Take), போட்டோ அன்பிளர் (Photo Unblur) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல பிக்சல் ஸ்டூடியோ (Pixel Studio) பீச்சர்கள் வருகின்றன.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ ஏஐ விலை (iPhone 16e Vs Pixel 9a Price):
ஐபோன் 16இ: 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59,900ஆக இருக்கிறது. 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 69,900ஆகவும், 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.89,900ஆகவும் இருக்கிறது. இப்போது தள்ளுபடியுடன் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9ஏ: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 43,080 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ. 51,715 ஆகவும் இருக்கிறது. ஆனால், இந்திய மார்கெட்டில் 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 49,999ஆக இருக்கிறது. பிளிப்கார்டில் விற்பனை தொடங்க இருக்கிறது.
ஐபோன் 16இ Vs பிக்சல் 9ஏ ஒப்பீடு (iPhone 16e Vs Pixel 9a Compared): டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளாட்பார்ம்க்கு ஏற்ப பக்காவாகவே இருக்கின்றன. ஆகவே, டிஸ்பிளே மற்றும் பேட்டரியில் பிக்சல் முந்துகிறது. விலையும் குறைவாகும்.


Click it and Unblock the Notifications








