Home
Mobile

ரூ.5000 விலை குறைப்பு.. திடீர்னு அடிச்சு புடிச்சு வாங்கப்படும் லேட்டஸ்ட் iPhone.. எந்த மாடல்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது செப்டம்பர் 2025 இல் அறிமுகமாகும் என்றும், இதன்கீழ் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயமாக புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் அறிமுகமானதும், ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் விலைகள் குறைக்கப்படும். அதற்கான முன்னோட்டமாக பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் ப்ரீடம் சேல் 2025 (Flipkart Freedom Sale 2025) வழியாக ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல் ஒன்றை ரூ.5000 நேரடி விலை குறைப்பின் கீழ் விற்பனை செய்கிறது.

ரூ.5000 விலை குறைப்பு.. லேட்டஸ்ட் iPhone.. எந்த மாடல்?

அதாவது ரூ.5000 டிஸ்கவுண்ட் ஆனது எந்த பேங்க் கார்டு அல்லது கூப்பன் ஆபரும் இல்லாமலேயே கிடைக்கும். அது ஐபோன் 16இ மாடல் (iPhone 16e) ஆகும். தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.54,900 க்கு வாங்க கிடைக்கிறது.நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது ரூ.59,900 க்கு அறிமுகமானது.

ஐபோன் 16இ விரிவான அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.

கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. ஐபோன் 16இ சிப்செட்: இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.

மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும்.

எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.

இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.

இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.

இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் கூட தகவல்தொடர்புக்கான விருப்பங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது - இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 16e gets Rs 5000 Price Cut Selling At Rs 54900 in Flipkart Freedom Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X