Home
Mobile

வணக்கம் டா மாப்ள.. Apple ஆல் செட்.. அடுத்த வாரம் வரும் iPhone 16 சீரீஸ்.. எந்த தேதி? என்ன விலை?

Apple iPhone 16 Series Launch Date: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வந்துவிட்டால் போதும், ஆப்பிள் நிறுவனத்தின் பெயரும், அதன் அடுத்த ஐபோன் மாடல்களின் பெயர்களும் ஆங்காங்கே அடிபட தொங்கிவிடும். ஏனென்றால் ஆப்பிள் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஐபோன்களை அறிமுகம் செய்யும் லான்ச் டைம்லைன் ஆக செப்டம்பர் மாதத்தை தேர்வு செய்து வைத்துள்ளது. பெரும்பாலும் இந்த ஆண்டும் அதில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. அதாவது 2024 மாடல்களான ஐபோன் 16 சீரீஸும் (iPhone 16 Series) கூட வருகிற செப்டம்பரில் "நிச்சமயாக" அறிமுகம் செய்யப்படும்.

அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவைகள் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்பது தான் இங்கே இருக்கும் மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது போல் தெரிகிறது. ஆப்பிளின் ஐபோன் 16 சீரீஸ் எந்த தேதியில் அறிமுகமாகும்? இதன்கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் இருக்கும்? என்ன விலைக்கு வரும்?

Apple ஆல் செட்.. அடுத்த வாரம் வரும் iPhone 16 சீரீஸ்.. எந்த தேதி?

ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் எந்த தேதியில் அறிமுகமாகும்? ஆப்பிளின் அடுத்த மற்றும் மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வானது அடுத்த வாரத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி ஐபோன் 16 சீரிஸ் ஆனது செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம். மேலும் புதிய ஐபோன் மாடல்கள் அனைத்துமே செப்.20 ஆம் தேதி முதலே விற்பனைக்கும் வரலாம்.

ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? வழக்கம் போல இந்தாண்டும் ஐபோன் 16 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்: ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max).

Apple ஆல் செட்.. அடுத்த வாரம் வரும் iPhone 16 சீரீஸ்.. எந்த தேதி?

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. ஐபோன் 16 சீரீஸோடு ஆப்பிள் நிறுவனம் அதன் பிளஸ் மாடல்களுக்கு முடிவு கட்டும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் பிளஸ் மாடல்களை அகற்ற திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

அதாவது ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடலுக்கு பின்னர் ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) மாடல் அறிமுகம் செய்யப்படாது. இதற்கு பதிலாக ஐபோன் 17 சீரீஸில் - ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முக்கிய மாற்றம் ஐபோன் 17 சீரீஸில் தான் வரும்; ஐபோன் 16 சீரிஸில் வராது.

Apple ஆல் செட்.. அடுத்த வாரம் வரும் iPhone 16 சீரீஸ்.. எந்த தேதி?

ஐபோன் 16 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $799 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100) அறிமுகம் செய்யப்படலாம். ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.

ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஐபோன் 16 சீரிஸின் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்கள் ஆகிய இரண்டும் பல ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் வெர்ஷன்கள் 256ஜிபி மற்றும் 512 ஜிபி விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் ப்ரோ வெர்ஷன்கள் 512ஜிபி மற்றும் 1டிபி வரை செல்லலாம்.

ஆப்பிளின் ஒவ்வொரு வெளியீட்டிலும் இருப்பது போலவே, மேற்கண்ட 4 மாடல்களின் இந்திய விலைகளும் நிச்சயம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதையும் இங்கே மறக்க வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 க்கும், ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு வெளியானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 16 Series Launch Event Date Sale Price All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X