ரூ.13,000 கம்மி.. அடுத்த மாசம் வரும் புது iPhone-ஐ வைத்து Google-க்கு ஸ்கெட்ச் போடும் Apple.. வேலைக்கு ஆகுமா?
நடந்து முடிந்த மேட் பை கூகுள் நிகழ்வின் முக்கிய ஹைலைட் எது என்று கேட்டால்.. அது நிச்சயமாக பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் அறிமுகம் தான் - குறிப்பாக இந்தியரகளுக்கு! ஏனென்றால் இது கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது பிக்சல் பிராண்டட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட, இந்தியாவில் அறிமுகமாகும் முதல் கூகுள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகும். எனவே மீதமுள்ள 3 பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் தான் - மாஸ்!
அம்சங்கள்அடிப்படையில் மட்டுமல்ல விலையிலும் கூட பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது "மாஸ்" ஆகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இது ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை (ரூ.1,99,900) விட மலிவாகவே உள்ளது.

இதற்கிடையில் தான் அடுத்த மாத (செப்டம்பர் 2024) வாக்கில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை நிர்ணயம் லீக் ஆகியுள்ளது. சுவாரசியமாக இது கூகுளின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட்-ஐ விட சுமார் ரூ.13,000 மலிவானதாக இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.1,59,900 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு ஆங்கிளில் பார்த்தால், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலையானது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ன் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட வெறும் ரூ.6000 மட்டுமே அதிகமாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம்ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.1,54,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எப்படியும் ஆப்பிள் நிறுவனமானது அதன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை இந்த 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்போவது இல்லை. ஆக பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக.. அதிக பட்சமாக அதன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலை தன களமிறக்க முடியும். இம்முறை ஐபோன் பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் ஏர் மாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
கூகுள் பிக்சல் 9 சீரீஸில் மீதமுள்ள ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஒரு பெரிய 6.9 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். அதாவது இதன் முன்னோடியின் 6.7 இன்ச் மாடல்களை விட குறிப்பிடத்தக்க அப்கிரேடை பெறலாம். கேமராக்களை பொறுத்தவரை இது புதிய 48எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டிருக்கலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில், ஈர்க்கக்கூடிய ஜூம் திறன்களை வழங்க கூடிய சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா இடம்பெறும் என்றும் வதந்தி பரவுகிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, முந்தைய மாடலின் 4,441எம்ஏஎச் உடன் ஒப்பிடும்போது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது பெரிய 4,676எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இது 40W வயர்டு சார்ஜிங் மற்றும் 20W MagSafe சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரலாம். கடைசியாகஇது ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஏ18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும்.


Click it and Unblock the Notifications








