Home
Mobile

அதிகாலை 4 மணி முதல் க்யூ.. iPhone 15 விற்பனை ஸ்டார்ட்.. ஆரம்பமே ரூ.6000 தள்ளுபடி.. ரூ.55700 எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்!

ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரிஸின் இந்திய விற்பனை இன்று (செப்.22) முதல் தொடங்கியது. இதன் கீழ் மொத்தம் 4 மாடல்கள் வாங்க கிடைக்கின்றன. அவற்றின் விலை என்ன? என்னென்ன தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

இந்தியாவில் உள்ள 2 ஆப்பிள் ஸ்டோர்களில் ஒன்றான டெல்லியின் செலக்ட் சிட்டி வாக்கிற்கு வெளியே புதிய ஐபோன்களை வாங்குபவர்களின் நீண்ட வரிசை காணப்பட்டதாகவும், ஆப்பிள் ஸ்டோர் ஆனது 8 மணிக்கு தான் திறக்கும் என்றாலும் கூட பலரும் அதிகாலை 4 மணி முதலே காத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

iPhone 15 விற்பனை ஸ்டார்ட்.. ஆரம்பமே ரூ.6000 தள்ளுபடி!

நினைவூட்டும் வண்ணம் டெல்லி (Delhi) மற்றும் மும்பையில் (Mumbai) ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்கள் (Apple Stores) திறக்கப்பட்டுள்ளன. புதிய ஐபோன் மாடல்களானது (ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) ஆப்பிள் ஸ்டோர்கள் வழியாக மட்டுமின்றி பிளிப்கார்ட், அமேசான் வழியாகவும் வாங்க கிடைக்கிறது.

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை விவரங்கள்:
ஐபோன் 15 (128 ஜிபி ஸ்டோரேஜ்): விலை ரூ.79,900
ஐபோன் 15 (256 ஜிபி ஸ்டோரேஜ்): விலை ரூ.89,900
ஐபோன் 15 (512 ஜிபி ஸ்டோரேஜ்): விலை ரூ.1,09,900 ஆகும்.

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை விவரங்கள்:
ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி): விலை ரூ.89,900
ஐபோன் 15 பிளஸ் (256 ஜிபி): விலை ரூ.99,900
ஐபோன் 15 பிளஸ் (512 ஜிபி): விலை ரூ 1,19,900 ஆகும்.

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை விவரங்கள்:
ஐபோன் 15 ப்ரோ (128 ஜிபி): விலை ரூ.1,34,900
ஐபோன் 15 ப்ரோ (256 ஜிபி): விலை ரூ.1,44,900
ஐபோன் 15 ப்ரோ (512 ஜிபி): விலை ரூ.1,64,900
ஐபோன் 15 ப்ரோ (1 டிபி): விலை ரூ.1,84,900

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை விவரங்கள்:
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி): விலை ரூ.1,59,900
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி): விலை ரூ.1,79,900
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி): விலை ரூ.1,99,900

ஐபோன் 15 சீரீஸ் மீதான தள்ளுபடிகள்: புதிய ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை வாங்குவதற்கு எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை (HDFC Bank Cards) பயன்படுத்தினால் ரூ.6,000 ரூபாய் உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நான்-ப்ரோ (Non-pro) மாடல்களான ஐபோன் 15 (iPhone 15) மற்றும் 15 பிளஸ்களுக்கு, ஆப்பிள் நிறுவனமானது ரூ.5,000 கேஷ்பேக்கை (Cashback) வழங்குகிறது. சுவாரசியமாக இந்த சலுகைகள் பழைய ஐபோன் மாடல்களுக்கும் பொருந்தும், ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (14 Plus) மீது ரூ.4,000 தள்ளுபடியும், ஐபோன் 13 (iPhone 13) மீது ரூ.3,000 தள்ளுபடியும் மற்றும் ஐபோன் எஸ்இ ( iPhone SE) மீது ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.

ஐபோன் 15 சீரீஸ் மீதான எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் (Exchage Offer): நேரடி தள்ளுபடிகள் தவிர, ஐபோன் 15 சீரிஸ் மீது 'ட்ரேட்-இன்' விருப்பங்களும் (Trade-in Options) அணுக கிடைக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனுக்கு தகுதியான ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும்போது ரூ.55,700 வரையிலான உடனடி கிரெடிட்டை (Instant Credit) பெறலாம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 15 Series India Sale Started Check Price Offers Discounts Exchange Value All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X