ஓ மை காட்! iPhone 15 புது தோற்றத்தை பெறுகிறதா? இது வேற லெவல் டீஸரா இருக்கே.!
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 14 தொடரை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த சீரிஸ் மாடலான ஐபோன் 15 வரிசையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக, வரவிருக்கும் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் சாதனத்தை பற்றிய சில விபரங்கள் லீக் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சில துணுக்குகள் நமக்கு கிடைத்திருந்தாலும், இப்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் மிகவும் ஸ்பெஷல் ஆனது.

ஐபோன் 15 இப்படி ஒரு புதிய தோற்றத்தில் வெளிவருகிறதா?
ஐபோன் 15 பற்றிய வதந்திகள் மற்றும் அறிக்கைகள் ஏற்கனவே இணையத்தில் அதிகமாக கேட்கத் தொடங்கியுள்ளன. இப்போது வெளியான சமீபத்திய லீக் படி, இந்த ஆண்டின் புதிய சீசனுக்கான, சாத்தியமான iPhone 15 மாடல் மற்றும் iPhone 15 Pro ஆகிய மாடல்கள் சிறப்பு வண்ணங்களை பெரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 9to5Mac இன் அறிக்கையின்படி, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max/Ultra மாடல்கள் ஒரு புதிய அடர் சிவப்பு நிற (#410D0D) விருப்பத்தைப் பெறுமாம்.
இது அடர் சிவப்பு நிறமானது பர்கண்டி ஷடோவ் கலருக்கு அருகில் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலையான ஐபோன் 15 மாடல்களைப் பொறுத்தவரை, அவை பிங்க் மற்றும் லைட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். MacRumors என்ற வலைப்பக்கம், புதிய ஐபோன் 15 சாதனத்தின் வண்ணம் எப்படி இருக்கும் என்பதை சுயமாக உருவாக்கிய ரெண்டரைப் பகிர்ந்துள்ளது. அது எப்படி உள்ளதென்று பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ சாதனம் தான் இந்த புதிய அடர் சிவப்பு நிறத்தை பெற போகிறது என்று வதந்திகள் குறிப்பிடுகிறது. ஆப்பிள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், அதன் ப்ரோ மாடல்களுக்கு சிறப்பு வண்ண பதிப்புகளை வெளியிடும் பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் பிராண்ட் ஐபோன் 12 ப்ரோவிற்கு புதிய பசிபிக் ப்ளூ நிறத்தையும் வழங்கியது.

இதற்கு முன் எத்தனை புதிய நிறங்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது தெரியுமா?
இதேபோல், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 ப்ரோவிற்கு சியரா ப்ளூவையும், ஐபோன் 14 ப்ரோவிற்கு புதிய ஸ்பேஸ் பிளாக் மற்றும் டீப் பர்பிளையும் அறிமுகப்படுத்தியது. வதந்தியான டைட்டானியம் ஃபினிஷ் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 15 அல்ட்ரா ஆகியவற்றுக்கு புதிய அடர் சிவப்பு வண்ண விருப்பம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் இதுவரை டைட்டானியம் ஆப்பிள் வாட்ச் மாடல்களை நிலையான சில்வர் டைட்டானியம் நிறம் மற்றும் இருண்ட டைட்டானியம் நிறத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், சிவப்பு நிற அனோடைசேஷன் முற்றிலும் புதியதாக இருக்கும். 9to5Mac அறிக்கை வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல் வெளியீட்டு காலவரிசைக்கு நெருக்கமாக விஷயங்கள் மாறக்கூடும் என்று கூறுகிறது.
இருப்பினும், ஆப்பிள் சாதனங்களை முன்கூட்டியே திட்டமிடுவதால், வடிவமைப்பு தேர்வுகள் எதிர்காலத்தில் இறுதி செய்யப்பட வேண்டும். ஆப்பிள் ஐபோன் 15 தொடரின் பொறியியல் சரிபார்ப்பு சோதனை கட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 மாடலில் எதிர்பார்க்கப்படும் இந்த அடர் சிவப்பு நிறம் உங்களுக்கு பிடித்துள்ளதா? இல்லையா? என்று கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








