காத்திருந்தது போதும், பணத்தை ரெடி பண்ணுங்க- Apple iPhone 14 அறிமுக தேதி இதுதானா?

|

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன்களை அறிமுகம் செய்ய தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் ஐபோன் 14 தொடர் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படலாம் என முந்தைய அறிக்கைகள் தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த புதிய மாடல்கள் அதே மாதம் 7 ஆம் தேதி அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏன் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி என்று தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 14 வெளியீட்டு தேதி

ஆப்பிள் ஐபோன் 14 வெளியீட்டு தேதி

ப்ளூம்பெர்க் தளத்தின் மார்க் குர்மன் இதுகுறித்து வெளியிட்ட தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் செப்டம்பர் 5 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் (Labor Day) என்றும் செப்டம்பர் 6 (செவ்வாய்கிழமை) பயண நாளாகவும் (travel day) இருக்கும் காரணத்தால் செப்டம்பர் 7 (புதன்கிழமை) அன்று ஐபோன் 14 வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆப்பிள் சாதனங்கள்

பல்வேறு ஆப்பிள் சாதனங்கள்

ஐபோன் 14 மட்டுமின்றி, நிறுவனம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் எஸ்இ மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ ஆகியவையும் இந்த தினத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது விற்பனைக்கு வரும்?

எப்போது விற்பனைக்கு வரும்?

அதேபோல் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 14 ஆனது செப்டம்பர் 16 (வெள்ளிக்கிழமை) விற்பனைக்கு வரும் என குர்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் அறிமுக நிகழ்வு

ஆப்பிள் அறிமுக நிகழ்வு

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பிரதான ஒன்று.

செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமாகும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும்

நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும்

Gadget Tendency அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் ஆரம்பத்தில் 90 மில்லியன் யூனிட்களுடன் இதன் விற்பனை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 இன் செல்பி கேமரா கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

ஐபோன் 14 இன் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

ஐபோன் 14 குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அந்த சாதனத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம்.

இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும்

இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும்

ஐபோன் 14 கேமரா குறித்த தகவலை பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டிருந்தார்.

அதில் ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஐபோன் 14 முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும் என குறிப்பிட்டார்.

ஆப்பிள் இதை செய்வது இதுவே முதன்முறை

ஆப்பிள் இதை செய்வது இதுவே முதன்முறை

ஐபோன் 14 இல் முன்பக்க கேமராவானது ஆட்டோஃபோகஸ் தன்மையை ஆதரிக்கும் என அவர் குறிப்பிட்டார். ஆப்பிள் நிறுவனம் தனது சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் தன்மையை கொண்டுவருவது இதுவே முதல் முறையாகும்.

இதுபோன்று வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ஐபோன் 14 மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதன் விலையும் ஐபோன் 13-ஐ விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகவே இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஐபோன் 14 அறிமுக தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 Might be Launching on September 7

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X