Home
Mobile

ஆப்பிள் ரசிகர்கள் குஷி: புதிய ஐபோன் 13 மாடல் எப்போ அறிமுகம் தெரியுமா?

ஆப்பிள் ரசிகர்களுக்கு இந்த செய்தி உண்மையில் அதிக மகிழ்ச்சியை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, காரணம் ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த புதிய ஐபோன் 13 மாடல் சீரிஸை எப்பொழுது உலக சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. ஐபோன் 13 சீரிஸ் போன்களில் இந்த ஆண்டு குறைந்தது 3 மாடல்கள் நிச்சயமாக அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 சீரிஸ்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்வதில் சிக்கலை சந்தித்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய ஐபோன் 12 சீரிஸ் போன்கள் தாமதமாக அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 13 சீரிஸ்

அதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய போன்கள் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இதனால் ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் அறிமுகம் தாமதமாகும் என்று நினைத்தவர்களுக்கு தற்போதைய செய்தி குஷி அடையச் செய்துள்ளது.

சமீபத்திய தகவலின் படி, இந்த ஆண்டு புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிக ரிப்ரெஷ் ரேட்

இந்த 2021 ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள், கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸை விட பல மடங்கு மேம்பட்ட மாடல்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சிறிய டிஸ்பிளே நாட்ச் உடன் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை இவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள்

புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் சிறப்பான அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராக்களுடன் மிரட்டலான வடிவமைப்புடன் புதிய வண்ணங்களுடனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அதன் புதிய சாதனத்துடன் அறிமுகம் செய்யும், அப்படி இந்த ஆண்டு என்ன புதிய தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

அறிமுகம்

கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாகச் செப்டம்பரில் நடைபெற வேண்டிய ஐபோன் 12 வெளியீடு அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. இதனால் உலக சந்தையில் ஐபோன் 12 மாடல்கள் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் அக்டோபர் இறுதியில் தான் விற்பனைக்கு வெளிவந்தது. அதேபோல், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் நவம்பர் மாத நடுவில் விற்பனைக்கு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு இந்த காலகட்டத்திற்கு முன்பாக ஐபோன் 13 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Series Might Get Launch on This September : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X