தள்ளுபடியுடன் பழைய iPhone வேணுமா?., அப்டேட் உள்ள புது iPhone வேணுமா?- எது பெஸ்ட் சாய்ஸ்?

|

Apple Iphone 13 அமேசான் தளத்தில் மீண்டும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஐபோன் 13 இன் அசல் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில், தற்போது அமேசான் தளத்தில் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐபோன் 14 வெளியாக போகிறது இந்த நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்விக்கான பதிலையும், தள்ளுபடி விவரத்தையும் பார்க்கலாம்.

ஐபோன் மீதான மோகம்

ஐபோன் மீதான மோகம்

ஐபோன் வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. காரணம் இதன் விலை உயர்வாக இருப்பதே. என்னதான் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தினாலும் ஐபோன் மீதான மோகம் என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால் இதன் விலையின் காரணமாக ஐபோன்கள் பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

ஆன்லைன் விற்பனை தளங்கள் தள்ளுபடி

ஆன்லைன் விற்பனை தளங்கள் தள்ளுபடி

இருப்பினும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோமா போன்ற ஆன்லைன் விற்பனை தளங்கள் அவ்வப்போது ஐபோன்களுக்கு அதீத தள்ளுபடியை அறிவிக்கிறது.

இந்த தள்ளுபடிகளானது ஐபோன் வாங்கிவிடலாமா என்று சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கிறது. அப்படியானா ஒரு அறிவிப்பைதான் பார்க்கப் போகிறோம்.

ஆப்பிள் ஐபோன் 13 தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 13 தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 13 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஐபோன் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். அமேசான் தளத்தில் ஐபோன் 13 ஆனது ரூ.79,900 என்று விற்கப்பட்ட நிலையில், ரூ.9,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது ரூ.70,900 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

தள்ளுபடியுடன் பழைய iPhone வேணுமா?

தள்ளுபடியுடன் பழைய iPhone வேணுமா?

அமேசான் வழங்கும் இந்த சலுகை எப்போது காலாவதியாகும் என்று தெளிவாக தெரியவில்லை. எனவே இந்த தள்ளுபடியில் ஐபோன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அவசரப்பட வேண்டாம் அதேபோல் அதிகமான காலஅவகாசமும் எடுக்க வேண்டும்.

இதெல்லாம் சரி, ஐபோன் 14 இன்னும் சில தினங்களில் அறிமுகமாக இருக்கிறதே ஐபோன் 13 இப்போது வாங்குவது என்பது சரியான முடிவா என்பது குறித்து பார்க்கலாம்.

அப்டேட் உள்ள புது iPhone வேணுமா?

அப்டேட் உள்ள புது iPhone வேணுமா?

ஐபோன் 14 ஆனது வழக்கமான பழைய மாடல் சிப்செட்டை கொண்டிருக்கும் என்றும் ஐபோன் 13 ஐ விட பெரிய மேம்படுத்தல் எதுவும் பெறப் போவதில்லை எனவும் வதந்தி தகவல் தெரிவிக்கிறது.

ஐபோன் 13 ஐ விட பெரிய மேம்படுத்தல் எதுவும் இதில் இருக்காது என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

புதிய ஐபோன் 14 சீரிஸ்

புதிய ஐபோன் 14 சீரிஸ்

மறுபுறம் புதிய ஐபோன் 14 சீரிஸ் அதிக விலையில் விற்பனைக்கு வரலாம் எனவும் ஆப்பிள் நிபுணர்கள் கணிக்கின்றனர். ஐபோன் 13 சீரிஸ்-ஐ இயக்கும் அதே ஏ15 பயோனிக் சிப்செட் தான் இதிலும் இடம்பெறும். வடிவமைப்பு அடிப்படையில், முந்தைய மாடல் ஐபோன் போன்று தான் இதுவும் இருக்கும் என கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே ரெஃப்ரஷிங் ரேட், சிறந்த மேம்பட்ட பேட்டரி ஆயுள், கேமரா அம்சங்கள் மேம்பாடு உள்ளிட்ட அப்டேட்கள் மட்டும் இந்த ஐபோன் 14 இல் இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

எது பெஸ்ட் சாய்ஸ்?

எது பெஸ்ட் சாய்ஸ்?

இதனடிப்படையில் இனி முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். இல்லை இது அனைத்தும் "வெளியான தகவல்" தான் இன்னும் சில நாட்கள் வெயிட் செய்து ஐபோன் 14 அம்சங்களை அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டு எந்த மாடல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு எடுத்தால், அதுவும் நல்ல முடிவு தான். ஆனால் அப்போதும் இந்த சலுகை கிடைக்குமா என்பது சந்தேகமே?

ஐபோன் 13 விலை இதுவாகவே இருக்குமா?

ஐபோன் 13 விலை இதுவாகவே இருக்குமா?

அதேபோல் ஆப்பிள் ஐபோன் 13 விலை இதுவாகவே இருக்கும் என கட்டாயமாக கூறிவிட முடியாது. இதற்கு காரணம் இருக்கிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் மிகவும் சக்தி வாய்ந்த எம்2 சிப்செட்டை அறிமுகம் செய்தது. எம்2 சிப் ஆனது சக்தி வாய்ந்த சிபியூ மற்றும் துல்லியமான கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. எம்2 சிப்செட் ஆதரவோடு மேக்புக் ஏர் 2022 சாதனத்தை சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்தது.

பழைய மாடல் விலையை உயற்றிய ஆப்பிள்?

பழைய மாடல் விலையை உயற்றிய ஆப்பிள்?

மேக்புக் ஏர் 2022 அறிமுகம் செய்த உடன் நிறுவனம் சாமர்த்தியமாக எம்1 சிப்செட் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் 2020 பதிப்பு விலையை அதிகரித்தது. காரணம் மேக்புக் ஏர் 2020 வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

புதிய மேக்புக் அறிமுகம் செய்யும் நேரத்தில் பழைய புகழ்பெற்ற சாதனத்தின் விலையை உயற்றினால் மக்கள் கவனம் எதை நோக்கி திரும்பும் என்பதை நாமே கணித்துவிடலாம். எனவே சாதுர்யமாக செயல்பட்டு முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Gets Huge Discount in Amazon: Is it worth to buy or wait for Iphone14

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X