காத்திருந்தது போதும்: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்., எல்லாமே புதுசு!

|

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 தொடரில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் டாப் எண்ட் மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன் 12 சீரிஸ், ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன்களில் ஆப்பிளின் ஏ 14 பயோனிக் எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும்.

காத்திருந்தது போதும்: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்., எல்லாமே புதுசு!

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் தீர்மானமும் ஓஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆகும். இந்த மாடலானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

காத்திருந்தது போதும்: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்., எல்லாமே புதுசு!

இது ஐஓஎஸ் 14 மூலம் இயக்கப்படுகிறது. இதில் டூயல் சிம் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2 கொண்டுள்ளது. இதில் லிடார் ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இதில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா அம்சம் இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில் ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதில் 5 ஜி ஆதரவு 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5 அம்சம் இருக்கிறது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை குறித்து பார்க்கையில், இதில் 128 ஜிபி மாடல் விலை ரூ.1,29,900 எனவும் 256 ஜிபி மாடல் விலை ரூ.1,39,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 512 ஜிபி மாடல் விலை ரூ.1,59,900 ஆகும். ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் கோல்ட், கிராஃபைட், பசிபிக் ப்ளூ மற்றும் சில்வர் கலர் வகைகளில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Apple Iphone 12 Pro Max Launched with Dolby Vision HDR Video Recording: Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X