சலுகையோடு ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி முன்பதிவு தொடக்கம்!

|

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இது பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய ஆர்டர்கள் தொடக்கம்

முன்கூட்டிய ஆர்டர்கள் தொடக்கம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 தொடரில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி ஆகியவற்றிற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

ஐபோன் 12 சீரிஸ், ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன்களில் ஆப்பிளின் ஏ 14 பயோனிக் எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 மினி நவம்பர் 12 முதல் இந்தியாவில் உள்ள 3500 சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி விலை

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி விலை

ஐபோன் 12 மினி 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.69,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 மினி 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.74,900 எனவும் 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.84,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை குறித்து பார்க்கையில் 128 ஜிபி வேரியண்ட் ரூ.1,29,900 எனவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,39,900 எனவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,59,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அட்டகாச அம்சம்: இனி வாட்ஸ்அப் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்- எப்படி தெரியுமா? இதோ எளிய வழிமுறைகள்!

ஐபோன் 12 மினி

ஐபோன் 12 மினி

ஐபோன் 12 மினி நீலம், வெள்ளை, பச்சை, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் கிராஃபைட், சில்வர், கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ நிறங்களில் வருகிறது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி சலுகைகள்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி சலுகைகள்

ஐபோன் 12 மினி வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் 6 மாத நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் வழங்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் எச்.டி.எஃப்.சி டெபிட் கார்ட்கள் மூலம் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வாங்கும்போது ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 மினி

ஐபோன் 12 மினி

ஆப்பிள் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் அகல கோண சென்சார் என இரண்டு கேமராவுடன் வருகிறது.

 ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் தீர்மானமும் ஓஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2 கொண்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Iphone 12 Pro, Iphone 12 Mini Pre-order Started in India: Here the offers details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X