ஆப்பிள் ஐபோன் 12 இந்த அம்சங்களுடன் இந்த விலையில் தான் அறிமுகமாகும் - டிப்ஸ்டர் ஜான்!

|

புதிய தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் சுலபமாகக் கொண்டு சேர்க்கப்படுகிற இன்றைய காலகட்டத்தில், தினம் தினம் வரும் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 மாடலை பற்றி அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸெர் வெளியிட்ட தகவல்

டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸெர் வெளியிட்ட தகவல்

ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் அதன் அம்சங்களை பற்றி கசிந்த சில தகவல்கள் அதன் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தை பற்றி யூகிக்க வாய்ப்பு கொடுக்காத வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸெர் மேலும் சில தகவல்களை தனது யூட்யூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார். ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல்களும் தற்பொழுது கசிந்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 12 சிறப்பம்சங்கள்

 • 5.4 இன்ச் OLED சூப்பர் ரெடினா திரை
 • 4ஜிபி ரேம்
 • 128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்புகள்
 • ஆப்பிள் எ14 ரக சிப்செட்
 • 5ஜி சப்போர்ட்
 • இரண்டு பின்பக்க கேமெராக்கள்
 • விலை: 128ஜிபி வேரியண்ட் 649 டாலர்கள் (ரூ. 49,200) மற்றும் 256ஜிபி 749 டாலர்கள் (ரூ.56,800).

  ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் விலை விபரங்கள்

  ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் விலை விபரங்கள்

  ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் அதே அம்சங்கள் கொண்டு வரும் இந்த ஆப்பிள் ஐபோன் மேக்ஸ் 12 சாதனம் 6.1' இன்ச் OLED சூப்பர் ரெடினா திரையுடன் வருகிறது. இதன் 128ஜிபி வேரியண்ட் மாடலின் விலை 749 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இந்திய மதிப்பு விலை என்ன தெரியுமா?

  இந்திய மதிப்பு விலை என்ன தெரியுமா?

  இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 56,800 ஆகும். அதேபோல், இதன் 256ஜிபி 849 டாலர்கள் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.64,400 நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆப்பிள் ஐபோன் 12 மாடலில் இரண்டு ப்ரோ வெர்ஷன்

  ஆப்பிள் ஐபோன் 12 மாடலில் இரண்டு ப்ரோ வெர்ஷன்

  ஆப்பிள் ஐபோன் 12 மாடலில் இரண்டு ப்ரோ வெர்ஷன் மாடல்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுது மேன்பட்ட அம்சங்களுடன் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற இரண்டு ஐபோன்கள் வெளியிடப்பட இருக்கின்றன. முதலில் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ பற்றிய விபரங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விபரங்களைப் பார்க்கலாம்.

  ஐபோன் 12 ப்ரோ:

  ஐபோன் 12 ப்ரோ:

  • 6.1 இன்ச் சாம்சங் உருவாக்கிய OLED சூப்பர் ரெடினா 10 பிட் வண்ண ஆழம் கொண்ட XDR திரை
  • ஆப்பிள் எ14 ரக சிப்செட்
  • 6ஜிபி ரேம்
  • 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்புகள்
  • ஸ்டான்லெஸ் ஸ்டீல் உடல்
  • 5ஜி சப்போர்ட்
  • மூன்று பின் கேமெராக்கள்+LiDAR
  • விலை: 128ஜிபி வேரியண்ட் 999 டாலர்கள் (ரூ. 75,700), 256ஜிபி 1,099 டாலர்கள் (ரூ.83,300) மற்றும் 512ஜிபி 1,299 டாலர்கள் (ரூ.98,500).

   ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

   ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

   • 6.7 இன்ச் சாம்சங் உருவாக்கிய OLED சூப்பர் ரெடினா 10 பிட் வண்ண ஆழம் கொண்ட XDR திரை
   • ஆப்பிள் எ14 ரக சிப்செட்
   • 6ஜிபி ரேம்
   • 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்புகள்
   • ஸ்டான்லெஸ் ஸ்டீல் உடல்
   • 5ஜி சப்போர்ட்
   • மூன்று பின் கேமெராக்கள்+LiDAR
   • விலை: 128ஜிபி வேரியண்ட் 1,099 டாலர்கள் (ரூ. 89,300), 256ஜிபி 1,199 டாலர்கள் (ரூ.90,900) மற்றும் 512ஜிபி 1,399 டாலர்கள் (ரூ.1,06,000)

Best Mobiles in India

English summary
Apple iPhone 12 Official Names Key Specs Revealed With Expecting Price By Tipster : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X