செகண்ட் ஹேண்ட் போன் எதுக்கு பாஸ்? அந்த காசுல iPhone 12 மினியே வாங்கலாம்!

|

iPhone 12 மினி ஏ14 பயோனிக் சிப் ஆதரவுடன் 2020 இல் வெளியானது. பிளிப்கார்ட்டில் தற்போது இந்த மாடல் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. சிறந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை செகண்ட் ஹேண்ட் இல் வாங்குவதற்கு பதிலாக இந்த ஐபோன் 12 மினி மாடலை புதிதாக வாங்கலாம். காரணம் அதற்கு இணையான விலையில் இது கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 12 மினி

ஆப்பிள் ஐபோன் 12 மினி

ஆப்பிள் ஐபோன் 12 மினி பிளிப்கார்ட் இல் மலிவான விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஐபோன் 12 மினி மாடல் ஆனது ரூ.43,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.35,000 என கிடைக்கிறது. சக்தி வாய்ந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனை செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு பதிலாக இந்த ஐபோன் 12 மினி மாடலை ரூ.35,000 என வாங்கலாம்.

ஐபோன் 12 மினி விலை

ஐபோன் 12 மினி விலை

ஐபோன் 12 மினி விலையானது தற்போது ரூ.37,999 என பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதாவது சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக ரூ.1500 வரை அதாவது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ஐபோன் 12 மினியை ரூ.36,499 என வாங்கலாம். பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த போனை ரூ.20,000க்கு கீழ் வாங்கலாம்.

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஆனது 2020 இல் அறிமுகமானது. ஐபோன் 12 மினி ஆனது சிறிய 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. முழு எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்ப்ளே.

மேம்பட்ட கேமரா ஆதரவுகள்

மேம்பட்ட கேமரா ஆதரவுகள்

ஐபோன் 12 மினி மாடலில் 12 எம்பி பிரதான லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி கிளிக் செய்வதற்கு என இதன் முன்புறத்தில் 12 எம்பி கேமரா இருக்கிறது. பின்புற கேமரா மூலம் 4கே வீடியோக்களை 60fps வரை படம் எடுக்கலாம். ஸ்லோ மோஷன் வீடியோ ஆதரவும் இதில் இருக்கிறது.

2,227 எம்ஏஎச் பேட்டரி

2,227 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 12 மினி ஆனது ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பிற 12 மாடல்களிலும் இதே ஏ14 பயோனிக் சிப்செட் தான் இருக்கிறது. ஆழமான பயன்பாடுகளையும் இந்த போனில் எளிதாக செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை, இதில் சிறிய செல் இருக்கிறது. வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 2227 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

FaceID பாதுகாப்பு அம்சம்

FaceID பாதுகாப்பு அம்சம்

iPhone 12 Mini ஆனது 5ஜி எல்டிஇ ஆதரவைக் கொண்டிருக்கிறது. வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.0 ஆதரவும் இதில் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என FaceID அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் கைரேகை ஸ்கேனர் இதில் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 12 64 ஜிபி வேரியண்ட்

ஐபோன் 12 64 ஜிபி வேரியண்ட்

ஐபோன் 12 64 ஜிபி வேரியண்ட் ரூ.59,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.48,999 என கிடைக்கிறது. இந்த மாடல் ஐபோனுக்கு பிளிப்கார்ட்டில் 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடலின் டிஸ்ப்ளே அளவு 6.1 இன்ச் ஆகும். இதிலும் டூயல் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. செராமிக் ஷீல்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புற கேமரா ஆனது நைட் மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங் என பல ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

டூயல் 12 எம்பி கேமரா

டூயல் 12 எம்பி கேமரா

ஆப்பிள் ஐபோன் 12 இன் 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.74,900 என கிடைத்த நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.61,999 என கிடைக்கிறது. இந்த ஐபோன் 12க்கு 17 சதவீதம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. டூயல் 12 எம்பி கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா இதில் இடம்பெற்றிருக்கிறது. ஏ14 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் ஐபோன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 12 Mini available at best ever low Price in Flipkart: Limited Time Only!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X