ஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.! முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.!
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்நிவனம் இந்நிறுவனம் பதிவு செயப்பட்ட டெவலப்பர்களான ஏழாவது ஐஒஎஸ் 13 பீட்டாவை இன்று வெளியிட்டுள்ளது.

ஹோல்ட்ஃபார் ரிலீஸ்
மேலும் இந்த அறிவிப்பில் ஐபோன் 11 சாதனம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது, பின்பு ஐஒஎஸ் 13 கோட் சார்ந்த ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லவந்தது என்னவென்றால் அந்த ஸ்னீரின் ஷாட்டில்
ஹோல்ட்ஃபார் ரிலீஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20
குறிப்பாக அடுத்த ஐபோன் மாடல் செப்டம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது, பின்பு கடந்த ஆண்டு இந்த ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் நிகழ்வை செப்டம்பர் 12-ம் தேதியன்று நடத்தியதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

ஐபோன் 11, ஐபோன் 11ஆர்
விரைவில் வெளிவரும் ஐபோன்கள் ஆனது ஐபோன் 11, ஐபோன் 11ஆர், ஐபோன் 11 மேக்ஸ் அல்லது ஐபோன் எக்ஸ்ஐ போன்ற பெயர்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்த ஆப்பிள் ஐபோன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

999 அமெரிக்க டாலர்கள்
வெளிவரும் ஐபோன் மாடல்கள் 1,099 மற்றும் 999 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

முரட்டுத்தனமான அம்சங்கள்:
வெளியாகப்போகும் ஐபோன்கள் ஐபோன் 11, ஐபோன் 11அர், ஐபோன்11 ப்ரோ போன்ற மாடல்கள் 5.8-இன்ச், 6.1-இன்ச், 6.5-இன்ச் எல்சி டிஸ்பிளே வடிவமைப்புகளுடன் வெளிவரும். பின்பு மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன்
புதிய ஐபோன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் தனது பேஸ் ஐடி அம்சத்தை மேம்படுத்த, அதன் லைட்டினிங் போர்ட-ஐ அதன் ஐபோன்களில் தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications