ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 12 மினி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக இந்த ஐபோன் 13 சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் தனித்துவமான அம்சங்களுடன் புதிய ஐபேட், ஐபேட் மினி, ஆப்பிள் வாட்ச் 7 உள்ளிட்ட பல்வேறு அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

 ஐபோன் 13 மாடல்களை

இந்நிலையில் ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 12. ஐபோன் 12 மினி மாடல்களின் விலையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய விலை குறைப்பு ஆப்பிள் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது, மேலே குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகளைப் பார்ப்போம்.

ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 12 மினி

ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 12 மினி

 • 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 11 மாடலின் முந்தைய விலை ரூ.54,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.49,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 11 மாடலின் முந்தைய விலை ரூ.59,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி மாடலின் முந்தைய விலை ரூ.69,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.59,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி மாடலின் முந்தைய விலை ரூ.74,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.64,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி மாடலின் முந்தைய விலை ரூ.84,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மாடலின் முந்தைய விலை ரூ.79,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மாடலின் முந்தைய விலை ரூ.84,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.70,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • 256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மாடலின் முந்தைய விலை ரூ.94,900-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.80,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

  ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

  ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும். ஐபோன் 12 சாதனமானது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.இரண்டு ஸ்மார்ட்போன்களும் டால்பி ஆதரவோடுவருகிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் அம்சத்துடன்இயக்கப்படுகின்றன.

  இனி WhatsApp ஆடியோ மெசேஜ்களை சத்தம் இல்லாமலே புரிந்துகொள்ளலாம்.. எப்படி தெரியுமா?இனி WhatsApp ஆடியோ மெசேஜ்களை சத்தம் இல்லாமலே புரிந்துகொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

  போன் 12 சாதனத்தில் 2851

  ஐபோன் 12 சாதனத்தில் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் கேமரா அமைப்பில் 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் செல்பி, வீடியோ அழைப்புகளுக்கு4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

  மிரட்டலான தோற்றத்தில் அதிக சக்தியுடன் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி அறிமுகம்..மிரட்டலான தோற்றத்தில் அதிக சக்தியுடன் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி அறிமுகம்..

  ஐபோன் 13 மாடல்கள்

  ஐபோன் 13 மாடல்கள்

  அதேபோல் இப்போது வந்துள்ள ஐபோன் 13 மாடல்களில் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஐபோன் 13 மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனங்களின் டிஸ்பிளே மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPhone 11, iPhone 12, iPhone 12 mini Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X