ஆன்டிராய்ட் டேப்லெட்களை சமாளிக்க ஆப்பிளின் புதிய ஐபேட்

Written By:

மொபைல் மார்கெட்டில் ஆன்டிராய்ட் டேப்லெட்களின் ஆதிக்கம் அதிகம் ஆகி வருவதால் இந்த போட்டிகளை சமாளிக்க ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேடில் புதுமைகளை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டேப்லெட்களை பொறுத்த வரையில் ஆப்பிள் ஐபேட் தான் உலக அளவில் முன்னிலையில் உள்ளது.

அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயறச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேடின் அடுத்த வெர்ஷனை வெளியிட உள்ளது. ஐபேட் 5 தான் அடுத்து ஆப்பிள் வெளியிட போகும் புதிய டேப்லெட் மாடல் ஆகும். ஆப்பிள் ஐபேட் 5 பற்றி ஏற்கனவே ஆன்லைனில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையாக வெளியான் ஆப்பிள் ஐபோன் 5S, 64 பிட் பிராசஸர், பிங்கர் பிரின்ட் சென்ஸார், ஐஓஎஸ் 7 என பல புதுமைகளுடன் வந்தது. அதனால் ஐபேட் 5 மற்றும் ஐபேட் மினியும் இந்த புதிய அம்சங்களுடன் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி ஆன்லைனில் மேலும் சில தகவல்களை படங்களுடன் கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபேட் 5

#1

இந்த படத்தை வைத்து பார்க்கும் பொழுது ஐபேட் 4ரை விட ஐபேட் 5 மெலிதாக இருக்கும் என தெரிகிறது. இதன் அளவும் சிறியதாக உள்ளது. வெளியில் எடுத்து செல்வதற்க்கு எளிதாக இருக்கும் வகையில் ஐபேட் 5 உருவாக்கப்பட உள்ளது.

ஐபேட் 5

#2

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5Sயை கோல்டு, சில்வர், கிரே என மூன்று வண்ணங்களில் வெளியிட்டது. அதே போல் ஐபேட் 5யும் மூன்று வண்ணங்களில் வரும் என தகவல்கள் கசிந்துள்ளது.

ஐபேட் 5

#3

ஐபேட் 5, 9.7 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே, 64 பிட் ஏ7 பிராசஸர், 2ஜிபி ராம், 8மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, பிங்கர் பிரின்ட் சென்ஸார் ஆகிய அம்சங்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#4

விரைவில் வெளிவர போகும் ஐபேட் 5க்ககாக உருவாக்கப்பட்ட கவர்கள் பல வண்ணங்களில்.

ஐபேட்5

#5

அக்டோபர் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஆப்பிள் ஐபேட்5 வெளிவரும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்