10.5-இன்ச் மற்றும் 12.9 - இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஆப்பிள் ஐபாட் ப்ரோ.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் ஐபாட் ப்ரோ வரிசையானது புதுபிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் புதிய 10.5-இன்ச் மற்றும் 12.9-இன்ச் ஐபாட் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் பல்வேறு தொழில்நுட்பமாற்றங்களை கொண்டுவந்துள்ளன.

ஐபாட் புரோ 10.5-இன்ச் மாடல் மெல்லிய உருவமைப்பு கொண்டுள்ளது, மற்றும் அது 1 பவுண்டு உலோக உடலைப் பயன்படுத்துகிறது. இந்த புதிய ஐபாட் ப்ரோ மாடல்கள் சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் மற்றும் அதிக லாபாம் பெறமுடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆப்பிள் ஐபாட் ப்ரோ பொருத்தமாட்டில் 10.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (2224-1668) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் அடுத்தது 12.9அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே (272-2048) வீடியோ பிக்சல் கொண்டவை. இவை அல்ட்ராலொவ் பிரதிபலிப்புடன் கூடிய புதிய ட்ரூ டோன் பேனலைக் கொண்டுள்ளன.

வன்பொருள்:

வன்பொருள்:

புதிய ஐபாட் புரோ, ஆப்பிள் 10எக்ஸ் ஃப்யூஷன் சில்லுடன் ஆறு செயலி கோர் கொண்டுள்ளது, மேலும் 12 கிராபிக்ஸ் கருவிகள் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. 40சதவீத அதிக ஜிபியு செயல்திறன் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

கேமரா:

கேமரா:

ஆப்பிள் ஐபாட் ப்ரோ டேப்ளெட்டுகள் பொருத்தமாட்டில் பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் இவைகளின் முன்புற கேமரா 7 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. 1080 வீடியோ பதிவு செய்யமுடியும் என இந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஐபாட் ப்ரோ மென்பொருள் பொருத்தவரை ஒரு தனித்திறமைப் பெற்றவை, ஐபாட் ப்ரோ மாடல்ஸ் ஐஒஎஸ்11 இல் இயங்கும். இந்த ஐபாட் ப்ரோ மாடல்களுக்கு முழு அளவிலான விசைப்பலகை உள்ளது இவற்றை மிக வேகமாக இயக்கமுடியும்.

 பேட்டரி:

பேட்டரி:

புதிய ஐபாட் புரோ மாடல்கள் 10 மணி நேர பேட்டரி ஆயுள் வரை வந்துள்ளன, மேலும் விரைவாக சார்ஜ் செய்ய ஆதரவு உள்ளது. ரோஜா தங்கம்இ விண்வெளி சாம்பல்இ தங்கம் மற்றும் வெள்ளி போன்ற வண்ணங்களில் வெளிவருகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இதன் இணைப்பு ஆதரவுகள் பொருத்தமாட்டில் வைஃபை, ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ்இயுஎஸ்பி 3, 4ஜிவோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

சேமிப்புதிறன் மற்றும் விலை:

சேமிப்புதிறன் மற்றும் விலை:

ஐபாட் புரோ 10.5-இன்ச் பொருத்தவரை 256ஜிபி வரை மெமரிக்கு 1079டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபாட் புரோ 12.5-இன்ச் பொருத்தமாட்டில் 512ஜிபி மெமரிக்கு 1229டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple iPad Pro with 10.5-inch and 12.9-inch Retina Display unveiled : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X