ஐஓஎஸ்8 க்கு மாற நீங்க ரெடியா, இன்று இரவு 10.30க்கு புதிய ஐஓஎஸ் 8 பதிவிறக்கம் செய்ய மறவாதீர்கள்

Written By:

ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியானதை அடுத்து ஐஓஎஸ் 8 இன்று இரவு 10.30 மணி முதல் இந்திய வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கீ போர்டு மாற்றங்கள்

#1

ஐ ஓஎஸ் 8 இன் கீ போர்டில் பல மாற்றங்கள் இருக்கும் எனஅறு ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. அனேகமாக ஆன்டிராய்டில் இருக்கும் ஸ்வைப் ஐஓஎஸ் 8 ல் அறிமுகப்படுத்தப்படுவதோடு க்விக்டைப் கீ போர்டு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

படங்கள்

#2

புதிய ஐஓஎஸில் போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை முன்பைவிட அருமையாக எடிட்செய்யலாம். தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் ஐக்ளவுட் டிரைவையும் பயன்படுத்தலாம்.

ஃபேமிலி ஷேரிங்

#3

இதில் நீங்கள் 6 பேர் வரை இணைத்து ஐட்யூன்ஸில் ஒருவர் வாங்குவதை அனைவரும் பயன்படுத்த அனுமதிக்கும். இதோடு இதல் குடும்ப படங்களையும் தொகுத்துக்கொள்ளலாம்

சிரி

#4

இதன் மூலம் உங்களுக்கு பிடித்த பாடல்களை ஐ ட்யூன்ஸில் வாய்ஸ் மூலம் வாங்க முடியும், இது 22 மொழிகளை புரிந்து கொள்ள முடியும்

ஐ க்ளவுட் டிரைவ் மெசேஜ் அப்ளிகேஷன்

#5

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8 மற்றும் ஐகேளவுட் டிரைவ்களை ஒருங்கினைத்துள்ளது. இதன் மூலம் ஐக்ளவ்டில் இருக்கும் தகவல்களை மேக் கணினியில் உபயோகிக்க முடியும்.
இந்த புதிய அப்ளிகேஷனில் நீங்கள் ஆடியோ மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இன்று இரவு 10.30 மணி முதல் ஐபோன் பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளர்கள் ஐஓஎஸ்8 பதிவிறக்கம் செய்ய முடியும். ஜூன் மாதம் அறிவித்ததை போல் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஓஎஸ் 8 ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், ஐபேட் டச் 5, ஐபேட் 2, ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட ஐபேட், ஐபேட் ஏர், ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மினி வகைகளில் சப்போர்ட் செய்யும்.

புதிதாக அறிவிக்கப்ட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்கள் ஐஓஎஸ் 8 கொண்டு தான் வெளிவருகின்றன, ஆனால் ஐபோன் 4 மாடலில் ஐஓஎஸ் 8 சப்போர்ட் செய்யாது.

வாடிக்கையாளர்கள் புதிய ஐஓஎஸை ஐ ட்யூன்ஸ் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய ஐபோன்களில் இருந்து அப்டேட் செய்ய செட்டிங்ஸ் - சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கவும். ஐ ட்யூன்ஸ் சென்றும் அப்டேட் கொடுக்கலாம்.

பாரப்பதற்கு ஐஓஎஸ் 8 புதிதாக தெரியவில்லை, ஐஓஎஸ் 7 போன்றே காட்சியளித்தாலும் உங்களை கவரும் பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐஓஎஸ் 8 புதிய சிறப்பம்சங்களை பார்ப்போமா

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot