இந்தியர்களின் நண்பனாகும் ஆப்பிள் ஐபோன் ioS 10 Siri.
ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் ioS 10 குறித்து இந்தியர்கள் உள்பட உலகத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் கேள்விப்பட்டிருப்பார்கள்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தபப்ட்ட இந்த ioS 10க்கு வாடிக்கையாளர் தரப்பில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியர்களும் இதை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரி (Siri) மற்றும் ioS 10ஐ இதற்கு முன் இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் இருந்தது என்பது அனைவரும் தெரிந்த்தே.
டிசம்பர் 2017 வரை ஆர் ஜியோ சலுகைகளை இலவசமாக நீட்டிப்பது எப்படி.?
ஆனால் தற்போது இந்தியாவில் சிரி மிக அருமையாக வேலை செய்கிறது. இந்நிலையில் சிரி ioS 10 குறித்த சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்
விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் எப்படி இருக்கும்?
அப்கிரேட் செய்யப்பட்ட சிரி-ல் தற்போது புதிய பல நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்களுக்காக எதையும் செய்யும் ioS 10 சிரி
ஆப்பிள் ஐபோனின் மிக அற்புதமான ioS 10 சிரி உங்களுக்காக எதையும் செய்யும் வல்லமை படைத்தது. உங்களுடைய பர்சனல் செகரட்டரி செய்யும் அனைத்து பணிகளையும் இந்த ioS 10 சிரி செய்துவிடும்.
உதாரணமான உங்களுக்கு ஒரு கேப் தேவை என்றால், உடனே ஹேய் சிரி, எனக்கு ஒரு கேப் வேண்டும், புக் செய் என்று நீங்கள் வாய்ஸில் கமாண்ட் செய்தால் போதும், ஆப்பிள் ஐபோனில் உள்ள கேப் ஆப்ஸை ஓப்பன் செய்து உங்களுக்கான கேப்-ஐ ioS 10 செய்து முடித்துவிடும். அதேபோல் உங்களுக்கு உணவு ஆர்டர் செய்ய வேண்டுமா, ரூம் புக் செய்ய வேண்டுமா? ரயில் அல்லது விமான டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? இதனிடம் ஒரு கமாண்ட் மட்டும் கொடுத்துவிடுங்கள்.
உங்கள் வேலை உடனே முடிந்துவிடும். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா

வாட்ஸ் அப் மெசேஜையும் அனுப்பிவிடும்
உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்கும் பிஏ வாக இருக்கும் சிரி, உங்கள் நண்பருக்கு ஒரு முக்கிய மெசேஜை வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அதையும் முடித்துவிடும். உங்கள் வேலையை சுலபமாக்கும் இந்த சிரியை நீங்கள் மிஸ் செய்யலாமா?
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திரைப்படங்களையும், நடிகர்களையும் தேட வேண்டுமா?
உங்களுக்கு தேவையான திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் போன்ற தகவல்களை தேட வேண்டும் என்றால் நீங்கள் கூகுளைத்தானே இதுவரை நம்பியிருந்தீர்கள். ஆனால் இனிமேல் நீங்கள் உங்கள் ஆப்பிள் ஐபோனை எடுத்து ioS 10 சிரியிடம் உங்களுக்கு தேவையானவற்றை பெற்று கொள்ளலாம்.
உதாரணமாக ஜர்னலிசம் பற்றிய திரைப்படங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒரு கமாண்ட் கொடுத்தால் உடனே உங்கள் போன் திரையில் உலகில் இதுவரை வெளிவந்த அனைத்து மொழி ஜர்னலிசம் படங்களும் தோன்றும்,. சன்னிலியோனி படம் முதல் சாதாரண காமெடி வரை ioS 10 சிரியில் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களை எளிதில் அணுகலாம்
ஆப்பிள் ஆப்ஸ்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்களையும் இதில் செயல்படும். ioS 10 சிரி மூலம் பேஸ்புக், டுவிட்டர், மெசஞ்சர், பிண்ட்ரஸ்ட் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் மிக எளிதில் அணுகலாம்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நேவிகேட் இதில் செயல்படுமா?
எவ்வளவோ செஞ்சிட்டோம், இதை செய்ய மாட்டோமா என்பது போல் நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்யும் இந்த ioS 10 சிரி, உங்களுக்கு நேவிகேட் செய்யவும் உதவுகிறது. நீங்கள் காரில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து ioS 10 சிரியிடம் நான் பெங்களூருக்கு செல்ல வேண்டும் வழிக்காட்டு என்று உத்தரவிட்டால் போதும், உங்களை மிகச்சிறந்த வழிக்காட்டுதல் மூலம் பெங்களூருக்கு அழைத்து சென்றுவிடும். உங்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் ioS 10 சிரியை நீங்களும் உபயோகிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை உடனே முடிவு செய்யுங்கள்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications