ஐ போன் 6 செப்டம்பரில் வெளியீடு....!
இன்றைக்கு ஆண்ட்ராய்டில் எத்தனையோ வகையான மொபைல்கள் வந்தாலும் ஆப்பிளின் ஐ போன்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதுமே ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஐ போனின் கடைசி வரவுகளான 5C மற்றும் 5S ஆகியவை விற்பனையில் சக்கை போடு போட்டன எனலாம் அந்த அளவுக்கு அனைத்து மொபைல்களுமே விரைவில் விற்று தீர்ந்தன.
தற்போது அனைவரது பார்வையும் விரைவில் வெளிவர இருக்கும் ஆப்பிளின் ஐ போன் 6 மீது திரும்பியுள்ளது எனலாம்.
வரும் செப்டம்பரில் இந்த மொபைலை வெளியிட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது மேலும் 5.5 இன்ச் நீளத்துடன் iOS 7 உடன் இந்த மொபைலை ஆப்பிள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

#1
இதன் டிஸ்பிளே வளைந்த மாடலுடன் வெளிவர இருக்கிறது

#2
இதில் முதன் முறையாக குவான்டம் டாட்ஸ் என்ற டெக்னாலஜி இதில் பயன்படுத்தபடுகின்றது

#3
இதிலுள்ள நவீன சென்சார்கள் மொபைலை முகத்துக்கு நேரே கொண்டு வந்தாலே போதும் டிஸ்பிளே ஆன் ஆகிவிடும்

#4
இதன் கேமராக்களில் சில புதுமைகளை புகுத்தி இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது

#5
வரும் செப்டம்பரில் இந்த மொபைல் கடைகளில் நமக்கு கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்துள்ளது


Click it and Unblock the Notifications