சில ஐபோன்கள் விற்க தடை: ஆப்பிளுக்கு வந்த சோதனை.!
ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும்.
உலகம் முழுவதும் விலை உயர்ந்த சாதனங்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம், மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த சில ஐபோன்களில் அதிகமான குறைபாடுகள் இருக்கிறது என வாடிக்கையாளர்கள் புகார்கள்
தெரிவித்த வண்ணம் உள்ளர்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் வழக்கு ஒன்று தொடர்ந்தது, அதற்கு இன்று ஜெர்மனி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் இந்த தீர்ப்பு ஜெர்மனியில் மகிவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன் 7, ஐபோன் 8:
ஜெர்மனி நீதி மன்றம் தீர்ப்பு என்னவென்றால், அந்நாட்டில் ஐபோன் 7, ஐபோன் 8 சாதனங்களின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு தடை விதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

15 விற்பனை மையம்
குறிப்பாக ஜெர்மனியில் இயங்கி வரும் 15 விற்பனை மையங்களில் நீதிமன்ற உத்தரவின் படி ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்பாடது என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்
மேலும் இது போன்று பல்வேறு நாடுகளில் ஐபோன்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டால்,ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவது மகிவும் உறுதி. ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும் என்று குவால்காமின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான விவரங்களை சமர்பிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம்
மேலும் ஆப்பிள் நிறுவனம் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில்
இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளது.

அப்டேட்
இப்போது வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோன் சாதனங்களை அப்டேட் செய்யும்போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை காண முடியும்.


Click it and Unblock the Notifications