ஒத்த போனுக்கு 10 போனுக்கான விலை.. அப்படி என்னங்க அதுல இருக்கு.. Apple களமிறக்கும் முதல் போல்டபிள் மாடல்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் போல்டபிள் ஐபோன் (Foldable iPhone) மாடலின் விலை விவரங்கள் கசிந்து, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. பக்கா பீச்சர்களுடன் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்கும் விலைக்கு களமிறங்க இருப்பதாக தெரிகிறது. சொல்லப்போனால், இது ஆப்பிள் மாடல்களிலேயே அதிக விலை கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. இந்த போல்டபிள் ஐபோன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் அதிக விலை கொண்ட ஆப்பிள் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) இருக்கிறது. இதன் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,49,900ஆக இருக்கிறது. 2 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.2,29,900ஆக இருக்கிறது. இந்த விலையே அதிகம்தான். இருப்பினும், ரூ.1.5 லட்சத்தில் ஆரம்ப விலை மாடலை வாங்கி கொள்ள முடிகிறது.

ஆனால், ஐபோன் போல்டபிள் மாடல் அப்படி இருக்கப்போவது கிடையாது. 2,399 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இந்த விலை இந்திய மதிப்பில் ரூ.2,14,068ஆக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆரம்ப வேரியண்ட்டாக இருக்கலாம். அப்போது டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலையை நினைத்து பாருங்கள்.
இந்த விலைக்கு ரூ.20,000 மதிப்புள்ள 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்கிவிடலாம். அதிலும், லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட், நல்ல கேமரா மற்றும் பேட்டரி பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த ஐபோன் போல்டபிள் மாடல் குறித்து ஆப்பிள் நிறுவனம், இதுவரை வாய் திறக்கவில்லை. ஆகவே, பீச்சர்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்களையும் உறுதி செய்யவில்லை.
இருப்பினும், அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிளின் போட்டி நிறுவமான சாம்சங் (Samsung) போல்டபிள் மட்டுமல்லாமல், ஃபிளிப் மாடல்களையும் ஏற்கனவே களமிறக்கிவிட்டது. இந்திய மார்கெட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதிலும் டாப் வேரியண்ட் அதிக விலைக்கு வருகிறது.
அதாவாது, சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு7 (Samsung Galaxy Z Fold7) இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,74,999ஆக இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.2,10,999ஆக இருக்கிறது. இது ஆப்பிளுடன் ஒத்துப்போகிறது.
ஆனால், எப்போதும் சாம்சங் நிறுவனத்தின் மாடல்களைவிட அதற்கு போட்டியாக இருக்கும் ஆப்பிளின் மாடல்களின் விலை அதிகமாகவே இருக்கும். ஆகவே, போல்டபிள் ஐபோனின் ஆரம்ப விலை வேரியண்ட்டே ரூ.2,14,068 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. டாப் எண்ட் வேரியண்ட் அதிகமாக இருக்கும். இது வெறும் யூகம் தான். ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்யும் வரை தெரிய வராது.
இருப்பினும், இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும், இந்தியாவில் ஐபோன் பிரியர்கள் இருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாங்க வாய்ப்புள்ளது. இந்த போல்டபிள் ஐபோனின் பீச்சர்கள் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு7 மாடலுக்கு போட்டியாகவே இருக்கும். ஆகவே, அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு7 முக்கிய அம்சங்கள்: இதில் 8 இன்ச் மெயின் டிஸ்பிளே, 6.5 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் கேலக்ஸி ஏஐ கிடைக்கிறது. 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடி, 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ உள்ளது. 4400mAh பேட்டரி, 25W வயர்டு, 15W வயர்லெஸ், 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.


Click it and Unblock the Notifications








