சம்பவம் இருக்கு.. போல்டபிள் ஐபோனை களமிறக்கும் ஆப்பிள்.. என்னென்ன அம்சங்கள்.. இதோ முழு விவரம்..
ஆப்பிள் (apple) நிறுவனம் இன்று இரவு 10.30 மணி அளவில் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் போன்ற போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதனுடன் மடக்கும் வகையிலான ஐபோன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மடக்கும் வகையிலான ஐபோன் ஆனது ஐபோன் டுயோ (iPhone Duo) அல்லது ஐபோன் ஃபோல்டு என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று இரவு 10.30 மணி அளவில் நடைபெறும் இந்த ஆப்பிள் நிகழ்வை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அவர்களின் யூடியூப் சேனலில் நேரலையாகக் காணலாம். இந்நிலையில் ஐபோன் டுயோ போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஐபோன் டுயோ அம்சங்கள் (iPhone Duo specifications): 48எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஐபோன் டுயோ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என் கூறப்படுகிறது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 12எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐபோன் டுயோ மாடலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் ஆப்பிள் பென்சிலை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
256ஜிபி ஸ்டோரேஜ், ஐஓஎஸ் 27 (iOS 27), ஏ20 ப்ரோ (A20 Pro) சிப், 5ஜி சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மேக்சேப்(MagSafe) போன்ற (iOS 27), ஏ20 ப்ரோ (A20 Pro) சிப், 5ஜி சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மேக்சேப்(MagSafe) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் ஐபோன் டுயோ மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8 போனுக்கு போட்டியாக இந்த புதிய ஐபோன் டுயோ வெளிவரும். அதேபோல் இந்த மடக்கும் வகையிலான ஐபோன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும். மேலும் ஐபோன் 18 ப்ரோ மாடலின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது.
ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள் (iPhone 18 Pro Specifications): 6.3-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion) மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தரமான ஏ20 ப்ரோ (A20 Pro) சிப் மற்றும் பில்ட் 2என்எம் பிராசஸர் இந்த ஐபோனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐஓஎஸ் 27 (iOS 27) மூலம் ஐபோன் 18 ப்ரோ மாடல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் அடுத்த தலைமுறை C2 மோடம் இந்த புதிய ஐபோனில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த ஐபோன் மூலம் மிகவும் துல்லியமான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனில் முன்பக்கம் 18எம்பி செல்பி கேமரா வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐபோனில் உள்ளன.
மேலும் IP68 ரேட்டிங், 5ஜி சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மேக்சேப்(MagSafe) போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் வெளிவரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,39,900-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: sammobile, @FamilyTaes / X


Click it and Unblock the Notifications
