Home
Mobile

7.8-இன்ச் டிஸ்பிளே.. ரூ.1.72 லட்சம்.. Apple-ன் முதல் Foldable iPhone அறிமுகம் எப்போது? ஏன் இவ்வளவு தாமதம்?

பெரும்பாலான ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களுடையுய கவனம் எல்லாம் - 2025 செப்டம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்கள் மீதும், இந்த சீரிஸில் பிளஸ் வேரியண்ட்டிற்கு பதிலாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மாடல் மீதும் இருக்கிறது.

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் சைலன்ட் ஆக இன்னொரு முற்றிலும் புதிய ஐபோன் மாடலில் பணியாற்றி வரும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த பல வருடங்களாக நமக்கு கிடைத்த லீக்ஸ் தகவல்கள் எல்லாம் - நிஜமாக போவது போல் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அதன் முதல் போல்டபிள் ஐபோனை (Apple's First Foldable iPhone) அறிமுகப்படுத்தலாம் என்கிற தகவல் கிடைத்து உள்ளது.

Apple-ன் முதல் Foldable iPhone அறிமுகம் எப்போது?

எப்போது அறிமுகமாகும்? ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதன் போல்டபிள் ஐபோனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, பல அறிக்கைகள் போல்டபிள் ஐபோனிற்கான மேம்பாடு இப்போது முழு வீச்சில் இருப்பதாகவும், இது 2026 இல் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, இது ஐபோன் 18 சீரிஸ் உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம்!

என்ன மாதிரியான வடிவமைப்பை பெறும்? இது ஐபோன் டென் (iPhone X) மாடலுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோனில் செய்த மிகப்பெரிய ரீடிசைன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மாடலை போன்ற ஒரு புக் ஸ்டைல் டிசைனை (Book Style Design) பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்? சாம்சங்கை போன்ற டிசைன் என்றால்.. ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆனது டேப்லெட் போல திறக்கும் ஒரு பெரிய இன்னர் டிஸ்பிளேவை பேக்ஸ் செய்யலாம். அதனுடன் வழக்கமான பயன்பாட்டிற்கான சிறிய கவர் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இது சுமார் $2,000 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1.72 லட்சதிற்கு அறிமுகம் செய்யப்படலாம்.

போல்டபிள் ஐபோனை அறிமுகம் செய்ய ஆப்பிள் இவ்வளவு தாமதம் செய்ய என்ன காரணம்? இவ்வளவு தாமதத்திற்கான முக்கிய காரணம் - புதிய வகைகளுக்கான (கேட்டகரிக்கான) ஆப்பிளின் அணுகுமுறை தான். பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் எடுத்த வேகத்திலேயே ஒரு புதிய தயாரிப்பு வகைக்குள் நுழைவயாது; மாறாக குறிப்பிட்ட தொழில்நுட்பம் ஆனது முதிர்ச்சியடையும் வரை காத்திருந்து அதன் பின்னர் அதை மேம்படுத்த முயற்சிக்கும்.

போல்டபிள் ஸ்மார்ட்போன்களுடன், சாம்சங் மற்றும் பிற ஆண்ட்ராய்டு பிராண்டுகள் ஏற்கனவே பல ஜெனரஷன் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்களில் பணியாற்றி, அதற்கான பலமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் இதற்காக தான் காத்திருந்தது போல் தெரிகிறது. லேட் ஆக வருவதால்.. ஸ்க்ரீன் மடிப்புகள் (Screen creases) மற்றும் நீடித்து உழைக்கும் கீல் (Hinge durability) போன்ற பொதுவான சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்காது!

அதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு எந்த சாவலுமே இருக்காது என்று கூறிவிட முடியாது. போல்டபிள் ஐபோனின் டிஸ்பிளே அன்போல்ட் செய்யப்படும் போது, அதாவது டிஸ்பிளே விரிக்கப்படும்போது தெரியும் விசிபிள் கிரீஸை குறைக்க ஆப்பிள் போராட வேண்டியிருக்கும். இதற்காக ஆப்பிள் ஒரு மேம்பட்ட கீல் பொறிமுறை மற்றும் மெல்லிய பொருட்களை பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 7.8 இன்ச் அளவிலான இன்னர் டிஸ்பிளே மற்றும் 5.5 இன்ச் அளவிலான கவர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அளவீடுகளை பொறுத்தவரை, திறந்திருக்கும் போது இது 4.5 மிமீ மட்டுமே இருக்கும் என்றும், மடிக்கும்போது சுமார் 9 மிமீ இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் - ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் ஆனது சந்தையில் வாங்க கிடைக்கும் மிகவும் ஸ்லிம் ஆன போல்டபிள் போன்களில் ஒன்றாக மாறும். கேமராக்களை பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய டூயல் கேமரா லென்ஸ் அமைப்பை பயன்படுத்துவதாக பேச்சுகள் அடிபடுகிறது.

மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட டச் ஐடி சென்சாருக்கு (Touch ID Sensor) ஆதரவாக ஃபேஸ் ஐடி அம்சத்தை (Face ID Feature) கைவிட்ட முதல் ஐபோன்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இது இடத்தை மிச்சப்படுத்தவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை தக்கவைக்கவும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சாஃப்ட்வேர் அடிப்படையிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். போல்டபிள் டிசைனை மனதில் கொண்டு தான் ஐஓஎஸ் 27 (iOS 27) உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது போல்டபிள் ஐபோனின் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் ஆனது வழக்கமான ஐபோன்களிலிருந்து சற்று வேறுபடலாம். ஐஓஎஸ் 27 அப்டேட் ஆனது பெரிய டிஸ்பிளே, மல்டி-டாஸ்கிங் மற்றும் ஆப்பிள் பென்சில் ஆதரவு ஆகிய அனைத்திலும் அதிக கவனம் செலுத்தும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple First Foldable iPhone with Samsung Fold Like Design May Launch in 2026 Why So Late
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X