ஆப்பிளுக்கான மொபைல் ப்ராசஸர்களின் விலையை உயர்த்திய சாம்சங்

ஐபோன் மற்றும் ஐபடுகளில் பயன்படுத்தப்படும் மொபைல் ப்ராசஸர்களின் விலை உயரத்தப்பட்டுவிட்டதால் ஆப்பிள் 20 சதவீத விலை உயர்வை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளுக்கான மொபைல் ப்ராசஸர்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தற்போது சாம்சங் ஆப்பிளுக்கு விற்றுவரும் மொபைல் ப்ராசஸர்களின் விலையை 20 சதவீதம் அதிகரித்துவிட்டதால் ஆப்பிள் இந்த விலையேற்றத்தை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மொபைலின் அப்ளிகேசன் ப்ராசஸரின் விலை ஏற்றத்தைப் பற்றி ஏற்கனவே ஆப்பிளிடம் பேசிவிட்டதாக சாம்சங் தெரிவிக்கிறது. சாம்சங்கிற்கு மாற்றாக இந்த மொபைல் ப்ராசஸர்களை தயாரித்து வழங்கு வேறு நிறுவனங்கள் இல்லாததால் இந்த விலை ஏற்றத்தை வேறு வழியில்லாமல் ஆப்பிள் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று தெரிகிறது.
தனது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான 130 மில்லியன் மொபைல் ப்ராசஸர்களை கடந்த ஆண்டு சாம்சங்கிடமிருந்து ஆப்பிள் வாங்கியது. மேலும் இந்த வர்த்தகத்திற்காக வரும் 2014 வரை சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
இந்த மொபைல் ப்ராசஸர்களின் விலை உயர்வால் வருங்காலங்களில் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதை உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications