Home
Mobile

ஐபோன் 7 இப்படி தான் இருக்கும், அடித்து கூறும் வல்லுநர்கள்.! நம்பலாமா.??

By Meganathan

அப்ப வரும், இப்ப வரும் என கூறப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் உண்மையில் எப்ப தான் வரும் என அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரிந்திருக்காது. இது தான் உண்மை. அந்நிறுவனம் புதிய கருவியை வழக்கம் போல அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியிடலாம். எது என்னவோ அந்நிறுவனத்தை சரியாக கனிப்பது சற்றே கடினமான காரியமே.

நிலைமை இப்படி இருக்க உலகெங்கும் இருக்கும் ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் இது தான். இந்த கருவியில் இவைகளை கட்டாயம் எதிர்பார்க்கலாம் என துவங்கி பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

ஐபோன்

ஐபோன்

இம்முறை ஆப்பிள் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஐபோன் கருவிகளை வெளியிடலாம், அடுத்த ஆண்டு இந்நிறுவனம் அதிகபட்சம் மூன்று ஆப்பிள் கருவிகளை வெளியிடும் என எதிர்பாராக்கப்படுகின்றது.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

4.7 இன்ச் போன் ஐபோன் 7 என்றும், 5.5 இன்ச் போன் ஐபோன் 7 ப்ளஸ் என அழைக்கப்படலாம். ஒரு வேலை ஆப்பிள் நிறுவனம் 4 இன்ச் ஐபோன் வெளியிட்டால் அது ஐபோன் 7 மினி என்று அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

பெயர்

பெயர்

ஆப்பிள் நிறுவனம் என்பதால் வழக்த்தை சற்றே மாற்றி புதிய ஐபோன் மேக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐபோன் 7

ஐபோன் 7

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் மாடல்களை போன்றே ஐபோன் 7 கருவியும் மெலிதாகவே இருக்கும். பெரும்பாலும் புதிய கருவிகள் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பேட்டரி

பேட்டரி

வழக்கம் போல ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியிலும் முந்தைய மாடல்களை விட சிறந்த பேட்டரிகளை வழங்கும் என்றே கூறப்படுகின்றது.

ரெசல்யூஷன்

ரெசல்யூஷன்

டிஸ்ப்ளே ரெசல்யூஷன்களை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் அதிகம் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே மற்றும் ரெசல்யூஷன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லென்ஸ்

லென்ஸ்

புதிய ஆப்பிள் கருவியில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

கேமரா

ஐபோன் 7 கருவியில் அதிகபட்சம் 12 எம்பி வரை ப்ரைமரி கேராவும், 1080பி ரெசல்யூஷன் கொண்ட முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.

யுஎஸ்பி

யுஎஸ்பி

ஆப்பிள் மேக்புக் கருவியில் இருப்பதை போன்று ஐபோன் 7 கருவியில் யுஎஸ்பி-சி போர்ட் வழங்கப்படலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஐபோன் 7 கருவியில் வளைந்த டிஸ்ப்ளே இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

முந்தைய ஸ்லைடர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இவை ஆப்பிள் வல்லுநர்கள் எதிர்பார்ப்பகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil Apple the specifications of upcoming iPhone 7.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X