அக்.3 வரைக்கும்.. யாரும், எந்த iPhone-ஐயும் வாங்கிடாதீங்க.. ஏன்னா.. Apple Diwali Sale-ல் எக்ஸ்ட்ரா ஆபர்!
Apple Diwali Sale 2024: மாத கடைசியில் நடப்பதால்.. அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, உங்களால் எந்தவகையான ஐபோன் மாடலையும் வாங்க முடியவில்லை என்றால்.. கவலைப்பட வேண்டாம். உங்களுக்காகவே ஆப்பிள் நிறுவனமானது தனது சொந்த தீபாவளி சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இது வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) உள்ளிட்ட அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளுமே இந்தியாவில் தங்களுடைய பண்டிகை கால விற்பனையை அறிவித்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனமும் தீபாவளி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் கீழ் ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபாட்கள், ஏர்போட்கள், மேக்புக்கள், ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் பல ஆப்பிள் தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் தீபாவளி விற்பனை 2024-ன் போது என்னென்ன ஆபர்கள் அணுக கிடைக்கும்? லோ மன்த்லி இஎம்ஐ (Low monthly EMI) - இதன்கீழ் பெரும்பாலான முன்னணி வங்கிகளில் இருந்து 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும்.
ஆப்பிள் டிரேட்-இன் (Apple Trade-In) - இதன் கீழ் எக்ஸ்சேஞ்ச் சலுகை அணுக கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய அல்லது தற்போதைய டிவைஸை ஆப்பிள் ட்ரேட் இன் உடன் பரிமாறி கொள்ளலாம்; இதன் வழியாக நீங்கள் வாங்கும் புதிய ஆப்பிள் தயாரிப்பின் அசல் விலையில் பெரும் தள்ளுபடியை பெறலாம்.
இலவச ஆப்பிள் மியூசிக் (Free Apple Music) - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் டிவைஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கான ஆப்பிள் மியூசிக் இலவசமாக கிடைக்கும். இலவச வேலைப்பாடு (Free engraving) - பயனர்கள் தங்களுடைய ஏர்பாட்ஸ், ஏர்டேக், ஆப்பிள் பென்சில் (2ன்ட் ஜெனரேஷன்) அல்லது ஐபேட் ஆகியவற்றில் ஈமோஜி, பெயர்கள் அல்லது எண்களின் கலவைகளை இலவசமாக பொறிக்கலாம்.
மேற்கண்ட விவரங்களை தவிர்த்து ஆப்பிள் நிறுவனம் அதன் தீபாவளி பண்டிகை கால விற்பனையின் போது கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளின் சரியான விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. வரும் நாட்களில் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம். அதற்கு முன்பாகவே புதிய ஐபோன்களை வாங்க விரும்புபவர்கள் பிளிப்கார்ட் வலைதளத்திற்கு செல்லலாம்.
கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடல்கள் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் "குறிப்பிட்ட கால சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ஐபோன் 15 ப்ரோ ஆனது அதன் பட்டியலிடப்பட்ட எம்ஆர்பி ஆன ரூ.1,09,900 இல் இருந்து ரூ.99,999 ஆக குறைந்துள்ளது. இதேபோல ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது ரூ.1,34,99 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான ஐபோன் மாடல்களை வாங்க விரும்பினால்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days Sale) போது ஐபோன் 15 (iPhone 15) மாடலை கருத்தில் கொள்ளலாம். தற்போது இதன் ஆரம்ப விலை ரூ.49,999 முதல் தொடங்குகிறது.
நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் எம்ஆர்பி விலை ரூ.69,900 ஆகும். அதாவது இது ரூ.14,901 பிளாட் தள்ளுபடியை பெற்றுள்ளது. கூடுதலாக, எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்சில் ரூ.3,000 தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் மூலம் ஐபோன் 15-ன் இறுதி விலையை மேலும் ரூ.5,000 குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications








