போய் வா நண்பா.. இனிமேல் இந்த 4 iPhone மாடல்களும் வாங்க கிடைக்காது.. வழக்கம் போல வேலைய பார்த்த ஆப்பிள்!
இந்தியா மற்றும் உலகளவில் புதிய ஐபோன் 17 சீரீஸ் (iPhone 7 Series) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
புதிய மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரிலிருந்து சில பழைய ஐபோன் மாடல்களை நீக்கியுள்ளது. ஏன் மற்றும் எதற்காக என்று குழப்பம் அடைய இதில் ஒன்றுமில்லை. புதிய மாடல்களின் விற்பனையை சூடுபிடிக்க வைக்க பழைய மாடல்களை நீக்குவது ஆப்பிளின் வழக்கமான "வியாபார உத்தி" தான்!

சரி அப்படியாக எந்தெந்த பழைய ஐபோன் மாடல்கள் 'டிஸ்கன்டினியூ' செய்யப்பட்டுள்ளன? ஆப்பிள் நிறுவனம் "வழக்கம் போல" முதலில் ப்ரோ மாடல்கள் மீதுதான் கைவைத்துள்ளது. பழைய ஐபோன் 16 சீரீஸின் கீழ் வெளியான 2 ப்ரோ மாடல்கள் ஆன ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய இரண்டுமே டிஸ்கன்டினியூ' செய்யப்பட்டுள்ளன
ஆக ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் இனிமேல் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வாங்க கிடைக்காது. அவைகள் அகற்றப்பட்டு, அப்கிரேடட் வெர்ஷன்கள் ஆன புதிய ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வைக்கப்படும்.
இதோடு ஐபோன் 16 சீரீஸ்க்கு முன்பாக வெளியான ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலும் டிஸ்கன்டினியூ' செய்யப்பட்டுள்ளன. பிளஸ் மாடலுக்கு பதிலாகத்தான் முற்றிலும் புதிய ஐபோன் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் - ஐபோன் 15 பிளஸ் நீக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆக இவைகளும் இனி ஆப்பிளிதாம் இருந்து நேரடியாக வாங்க கிடைக்காது.
மேற்கண்ட 4 மாடல்களையும் வாங்கவே முடியாதா? அப்படியெல்லாம் இல்லை. இவைகளை இனிமேல் ஆப்பிளில் இருந்து வாங்க முடியாது; ஆப்பிள் ஸ்டோரில் பட்டியலிடப்படாது. ஆனாலும் மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்கள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தளங்கள் மூலம் வாங்கலாம்
குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களும் தங்கள் வருடாந்திர பண்டிகை கால விற்பனைக்கு தயாராகி வருகின்றன பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்). ஆக மேற்கண்ட 4 மாடல்கள் மட்டுமின்றி, ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மீதும் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.
ஆப்பிளின் புதிய ஐபோன் 17 மாடலின் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
புதிய "அல்ட்ரா ஸ்லிம்" ஐபோன் ஏர் விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மாடல்களின் ப்ரீ-ஆர்டர்களுமே செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கும். டெலிவரி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கும்.


Click it and Unblock the Notifications








