Home
Mobile

அவ்ளோ தான்.. இனிமே இந்த iPhone கிடைக்காது.. பட்ஜெட் வாசிகள் தலையில் இடியை இறக்கிய Apple.. ஏன்? என்ன மாடல்?

டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் (Apple) நிறுவனம், அதன் புதிய ஐபோன் 15 சீரீஸை (iPhone 15 Series) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) உடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 9 (Apple Watch Series 9), ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) ஆகியவைகளும் அறிமுகமாகின.

இனிமே இந்த iPhone கிடைக்காது.. ஏன்? என்ன மாடல்?

இந்நிகழ்வில் யூஎஸ்பி டைப்-சி உடனான ஏர்பாட்ஸ் ப்ரோவும் (Air Pods Pro) அறிமுகமாகியது. மேலும் ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டாளர்களுடனான (EU Regulators) சிக்கல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 4 புதிய ஐபோன்களிலும் லைட்னிங் போர்ட்டிற்கு பதிலாக யூஎஸ்பி டைப்-சி போர்ட் இடம்பெற்றுள்ளது.

இந்த 4 புதிய ஐபோன்களின் வருகையை தொடர்ந்து - எதிர்பார்த்தபடியே - ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மினியை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. அதாவது இனிமேல் ஐபோன் 13 மினி மாடலானது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படாது என்று அர்த்தம்.

நினைவூட்டும் வண்ணம், ஐபோன் 13 மினி மாடல் ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டில் 699 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 2022 ஆம் ஆண்டில் $100 விலைக்குறைப்பையும் பெற்றது. தற்போது ஐபோன் 13 மினி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆப்பிள் அதன் தயாரிப்பு வரிசையில் 5.4 இன்ச் அளவிலான மாடலை இழக்கிறது.

இந்த இடத்தில், கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 சீரிஸில் மினி மாடல் எதுவும், அதாவது ஐபோன் 14 மினி மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேதான் ஐபோன் 15 சீரிஸ் விஷயத்திலும் நடந்துள்ளது; ஐபோன் 15 மினி மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.

ஐபோன் 13 மினி ஏன் நிறுத்தப்பட்டது? ஆராய்ச்சி நிறுவனமான CIRP-இன் தரவுகளின்படி, ஐபோன் மினியின் விற்பனை ஆனது மற்ற ஐபோன் மாடல்களை விட மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த ஐபோன் 13 விற்பனையில் மினி மாடலின் விற்பனை வெறும் 3% மட்டுமே இருந்தது.

அதாவது மினி மாடல் ஆனது, ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. எனவே தான் கடந்த ஆண்டே, ஐபோன் 14 சீரிஸில் மினி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு.. இருந்த ஒரு மினி மாடலும் "அதிகாரப்பூர்வமாக" காலி செய்யப்பட்டுள்ளது.

ஆக பட்ஜெட் விலையிலான ஐபோன்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு இனிமேல் ஐபோன் வாங்குவதற்கான வாய்ப்பே கிடைக்காதா? ரூ.70000 சிலவு செய்து புதிய ஐபோன் 15 மாடலையோ அல்லது.. பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் சலுகை விலையில் விற்கப்படும் பழைய ஐபோன்களையோ தான் வாங்க வேண்டுமா என்று கேட்டால்.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!

ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் நான்காம் தலைமுறை ஐபோன் எஸ்இ மாடலில் பணியாற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஆப்பிளின் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும் இது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
Apple Discontinued iPhone 13 Mini So Next Budget Model Could be iPhone SE 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X