3 iPhone மாடல்களை "கொலை" செய்த Apple! இனி லட்ச ரூபாய் கொடுத்தாலும்?
ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் 2022 ஐபோன்களை, அதாவது ஐபோன் 14 சீரீஸின் கீழ் 4 புதிய மாடல்களை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்த மறுகையில் அதன் மூன்று ஐபோன் மாடல்களை "கொலை" செய்துள்ளது (Killed)!
அதாவது Apple குறிப்பிட்ட 3 ஐபோன்களை "நிறுத்தி உள்ளது". மேலும், இனி எத்தனை லட்சம் கொடுத்தாலும் கூட உங்களால் அந்த மூன்று மாடல்களை வாங்கவே முடியாது!

அந்த மூன்றும் மிகவும் பழைய மாடல்கள் என்று நினைத்து விட வேண்டாம்!
ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமானதும் - மிகவும் பழைய ஐபோன் மாடல்கள் - அதாவது ஐபோன் 8, ஐபோன் 9 போன்ற மாடல்கள் "நிறுத்தப்பட்டுள்ளது" என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!
அதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் iOS 16 அப்டேட்டிற்கு தகுதி இல்லாத iPhone 6s, iPhone 7 மற்றும் iPhone SE 1st Gen போன்ற மாடல்களே 'கில்' (Kill) செய்யப்பட்டுள்ளன என்று நினைத்தாலும் தவறு!

நிறுத்தப்பட்டுள்ளது லேட்டஸ்ட் மாடல்கள் ஆகும்!
ஆம்! iPhone 14 சீரீஸ் மாடல்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான வேகத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் "நிறுத்தப்பட்டுள்ள" மூன்று ஐபோன் மாடல்கள், மிகவும் லேட்டஸ்ட் மாடல்கள் ஆகும்.
அந்த மூன்று மாடல்களில் 2 ஐபோன் 13 சீரீஸை சேர்ந்தது மற்றொன்று ஐபோன் 12 சீரிஸை சேர்ந்தது ஆகும்!

என்னென்ன ஐபோன் மாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன?
ஐபோன் 13 சீரீஸின் iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max மாடல்களும், ஐபோன் 12 சீரீஸின் iPhone 12 Mini மாடலும் தான் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இந்த மூன்று மாடல்களில் இரண்டு மாடல்களுக்கு மாற்றுகளை வழங்கியுள்ளது. அதாவது ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை மாற்றாக அறிமுகம் செய்துள்ளது!

ஆனால் iPhone 12 Mini-யின் கதை மொத்தமாக முடிந்தது!
ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு 'ஆல்டர்நேட்டிவ்ஸ்' வெளியாகிவிட்டாலும் கூட துரதிர்ஷ்டவசமாக, ஐபோன் 12 மினி ஆனது முற்றிலுமாக "நிறுத்தப்பட்டுவிட்டது".
அதாவது தற்போது வரை இந்த மாடலுக்கு மாற்றாக எந்த மாடலும் இல்லை. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 சீரிஸின் கீழ்மினி மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை; மாறாக ஐபோன் 14 பிளஸ் மாடலே அறிமுகமாகி உள்ளது!

இதற்கெல்லாம் என்ன காரணம்?
பெரிதாக எந்த காரணமும் இல்லை! புதிய ஹை-எண்ட் ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும், பழைய ஹை-எண்ட் மாடல்கள் "Kill செய்யப்படுவது" ஒவ்வொரு வருடமும் நடப்பது தான்; இதில் ஆச்சரியப்படுவதற்கு, குழப்பம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை!

ஐபோன் 13 ப்ரோ - ஒரு கலக்கு கலக்கியது என்றே கூறலாம்!
ஏனெனில் செயல்திறன் அடிப்படையில், ப்ரோ மாடல் ஆனது வெண்ணிலா மாடலான iPhone 13 ஐ விட வேகமான 5-core GPU மற்றும் சிறந்த பேட்டரி லைஃப்-ஐ வழங்குகிறது.
தவிர, இது சற்றே மேம்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் மிகவும் சிறிய டிஸ்பிளே நாட்ச் உடன் அறிமுகமானது!

iPhone 13 Pro Max-வை பற்றி சொல்லவே வேண்டாம்!
ஏனெனில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது ஐபோன் 13 ப்ரோவின் 'பிக்கர் வெர்ஷன்' ஆகும்.
அதுமட்டுமின்றி, சந்தையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். போதாக்குறைக்கு, பெரிய 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே வேறு!

புதிய iPhone 14 சீரீஸின் விலை விவரங்கள்:
ஒருவேளை நீங்கள் பழைய மாடல்களின் மீது எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை, உங்களின் முழு கவனமும் லேட்டஸ்ட் 2022 ஐபோன் மாடல்கள் மீதுதான் இருக்கிறது என்றால், புதிய iPhone 14 சீரீஸின் விலை விவரங்கள் இதோ:
ஐபோன் 14 - ரூ.79,900
ஐபோன் 14 பிளஸ் - ரூ. 89,900.
ஐபோன் 14 ப்ரோ - ரூ.1,29,900
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,39,900.


Click it and Unblock the Notifications