Home
Mobile

பிப்.19-க்கு இருக்கு மாப்ள.. புதுசா வருதுனு சொன்ன டிம் குக்.. குஷியில் Apple பிரியர்கள்.. iPhone SE 4 தான் போல

இந்த ஒரு வார்த்தைக்காக தானே காத்திருந்தோம் என்று ஆப்பிள் பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விடும்படி ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அதை சொல்லிவிட்டார். வேறொன்றும் இல்லை, ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என்று மார்கெட்டில் தகவல் வெளியாகியும், ஆப்பிள் நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை. இப்போது, டிம் குக் பிப்ரவரி 19ஆம் தேதி புது ஆப்பிள் வெளியீடு (New Apple Launch) இருப்பதை உறுதி செய்துவிட்டார்.

இதனால் அது நிச்சயம் ஐபோன் எஸ்இ 4 மாடலாக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொல்லப்போனால், அது உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஆப்பிள் வெளியீடுகள் குறித்து முன்கூட்டியே டிப் கொடுக்கும் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் (Mark Gurman) அடுத்த வாரம் ஐபோன் எஸ்இ 4 அறிமுகம் இருப்பதாக தெரிவித்தார்.

பிப்.19-க்கு இருக்கு மாப்ள.. புதுசா வருதுனு சொன்ன டிம் குக்.. குஷி!

மேலும், இந்த அறிமுகம் பிரம்மாண்டமாக இருக்காது. செய்தி வெளியீடு மூலமாக நடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படியே ஆப்பிள் சிஇஓ டிம் குக் நேரத்தை குறிப்பிடாமல் பிப்ரவரி 19ஆம் தேதியை மட்டும் குறிப்பிட்டு ஆப்பிள் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார். ஆகவே, அந்த தேதியில் ஐபோன் எஸ்இ 4 வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

2016ஆம் ஆண்டில் வெளியான ஐபோன் எஸ்இ மாடலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. இதனால், ஐபோன் எஸ்இ 2 மற்றும் ஐபோன் எஸ்இ 3 மாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றன. சொல்லப்போனால், இந்த மாடல்களும் செய்தி வெளியீடு மூலம் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், டைப்-சி போர்ட், டைனாமிக் ஐலேண்ட் அவற்றில் இல்லை.

ஆனால், இப்போது வர இருக்கும் ஐபோன் எஸ்இ 4 மாடலானது, அடுத்த ஜெனரேஷன் வெர்ஷனாக இருப்பதால் அதில் இப்போதைய ஐபோன்களில் கிடைக்கும் பீச்சர்கள் இடம்பெறும் என்று நிச்சயம் நம்பலாம். ஏனென்றால், மார்கெட்டில் கசிந்த பீச்சர்களும் அதைத்தான் உறுதி செய்துள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி அறிமுக வீடியோவுடன் இந்த ஐபோன் எஸ்இ 4 வெளியாக வாய்ப்புள்ளது.

அதோடு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் அடங்கிய செய்தி வெளியீடும் இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் முதலில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 28ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என்றும் மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது வெளியான அடுத்த வாரத்தில் விற்பனை தொடங்கலாம்.

இந்த போனின் ஆரம்ப விலை 499 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம். ஆகவே, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43,313 பட்ஜெட்டில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கும் என்பதில் சந்தேமில்லை. இப்போது, ஐபோன் எஸ்இ 4 அம்சங்கள் (iPhone SE 4 Specifications) எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். ஏ18 (A18) சிப்செட் வருகிறது.

ஆகவே, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) கிடைக்க இருக்கிறது. ஐலேண்ட் (Dynamic Island) பீச்சருடன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 8 ஜிபி ரேம் மற்றும் 3279mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி செல்பீ வருகிறது. டைப்-சி போர்ட் உள்ளது.

Image Source - @appltrack (X)

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook Officially Confirmed New Apple Launch on February 19 iPhone SE 4 Expected
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X