இந்திய ரூபாயில் ஆப்பிள் வெளியிட்டிருக்கும் விலைப் பட்டியல்

Posted By: Karthikeyan
இந்திய ரூபாயில் ஆப்பிள் வெளியிட்டிருக்கும் விலைப் பட்டியல்

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஸ்டோரில் உள்ள விலைப் பட்டியலை தற்போது இந்திய ரூபாயிலும் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன் இத்தகைய வசதியை ஆப்பிள் ஸ்டோரில் பார்க்க முடியாது. மேலும் ஆப்பிளின் விலைப் பட்டியல் பொதுவாக அமெரிக்க டாலரில் மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த புதிய வசதி மூலம் ஆப்பிளின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று நம்பலாம். மேலும் ஆப்பிளின் ஐபோன் 5 இந்தியாவிற்கு வரவிருக்கும் நிலையில் இந்திய ரூபாயில் வரும் ஆப்பிளின் விலைப் பட்டியல் ஆப்பிள் ஐபோன் ஐ5ன் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

புதிய ஆப்பிள் ஐபோன் 5 வரும் நவம்பர் 2ல் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தீபாவளிக்கு ஆப்பிளின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன் 5 சிறந்த பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்