அறிமுகமானது ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்..!!

By Meganathan
|

பல மாத வதந்திகளுக்கு ஒரு வழியாக முற்று புள்ளி வைத்தது உலகின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இரு கருவிகளை வெளியிட்டு எதிர்பார்ப்பு செய்திகளை உண்மையாக்கியுள்ளது.

செப்டம்பர் 2015 : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

ஐபோன் 6

ஐபோன் 6

எதிர்பார்த்ததை போன்றே வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை, புதிய கருவியும் பார்க்க ஐபோன் 6 போன்று தான் காட்சியளிக்கின்றது.

திரை

திரை

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது.

3டி ஃபோர்ஸ் டச்

3டி ஃபோர்ஸ் டச்

புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

புதிய ஏ9 சிப்செட் மூலம் 70 சதவீதம் சிபியு வேகம் மற்றும் 90 சதவீதம் வேகமான ஜிபியு அனுபவிக்க முடியும், இதனால் அதிக கிராஃபிக்ஸ் கொண்ட வீடியோ கேம்களையும் சிரமம் இன்றி வேகமாக விளையாட முடியும்.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 12 எம்பி ஐசைட் கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது.

வீடியோ

வீடியோ

இரு ஸ்மார்ட்போன்களும் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருப்பதோடு செல்பீ கேமரா மூலம் 720 பிக்சல் ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

விற்பனை

விற்பனை

இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் புதிய கருவிகள் மூன்று மாடல்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

அதன் படி ஐபோன் 6எஸ் 16ஜிபி $649, 64ஜிபி $749 மற்றும் 128ஜிபி $849 என்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 16ஜிபி $749, 64ஜிபி $849 மற்றும் 128ஜிபி $949 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple Announces iPhone 6S and iPhone 6S Plus. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X