ஒருவழியாக.. iPhone 16 சீரீஸ்-ன் அறிமுக தேதியை அறிவித்தது Apple.. LIVE ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?
Apple iPhone 16 September 9 Event: ஒருவழியாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்கிற சரியான வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரையிலாக ஐபோன் 16 சீரீஸ் ஆனது வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையாகவில்லை. மாறாக ஐபோன் 16 சீரீஸ் ஆனது செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த வெளியீட்டு நிகழ்விற்கான அழைப்பிதழில் "இட்ஸ் க்ளோடைம்" (Its Glowtime) என்கிற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் இன்டெலிஜென்ஸ் உடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதாவது வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ் ஆனது ஆப்பிளின் சொந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுவரலாம்.

புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களோடு சேர்த்து ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய ஆப்பிள் வாட்ச் (அல்லது புதிய அல்ட்ரா மாடலுடன் சேர்த்து 2 ஸ்மார்ட் வாட்ச்கள்), புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 மற்றும் பிற லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட்களுக்கான கிடைக்கும் தேதிகளையும் வெளிப்படுத்தலாம்.
இந்நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும். மேலும் இது யூட்யூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படும். இந்த வெளியீட்டை ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள், செப்டம்பர் 9, 2024 அன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு யூட்யூப் வழியாக ஸ்ட்ரீம் செய்யலாம்.
வதந்திகளின் அடிப்படையில், புதிய ஐபோன் 16 சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அவைகள் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்கள் ஆகும்.
இந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் அதன் அனைத்து மாடல்களிலும் ஆக்ஷன் பட்டனை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில். முதல் முறையாக பேஸிக் ஐபோன்களில் உள்ள ஐகானிக் அலெர்ட் ஸ்லைடர் அந்த ஆக்ஷன் பட்டன் ஆக மாற்றப்படும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் வழியாகவே ஆக்ஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐபோன் 16 சீரீஸின் வெளியீட்டு தேதிக்கு அடுத்ததாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் - ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) தான். இது கடந்த WWDC நிகழ்வில், ஐஓஎஸ் 18-ல் ஒரு கண்ணோட்டமாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் ஐபோன் 16 சீரீஸ் நிகழ்வில் பல கூடுதல் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $799 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100) அறிமுகம் செய்யப்படலாம். ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.
ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $799 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100) அறிமுகம் செய்யப்படலாம். ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.
ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேற்கண்ட 4 மாடல்களின் இந்திய விலைகளும், அமெரிக்க விலைகளை விட நிச்சயம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 க்கும், ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு வெளியானது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








