Home
Mobile

புதிய லூமியா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா!

By Super

புதிய லூமியா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா!
ஒவ்வொரு நிறுவனமும் தனது படைப்புகளை சந்தையில் போட்டி கொடுக்கும் வகையில் புதிய வசதிகளுடன் உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் நோக்கியா நிறுவனம் லுமியா 601 என்ற மொபைலை உருவாக்கி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் ரகத்தில் வரும் இந்த புதிய லூமியா 601 மொபைல், விண்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை மக்கள் அதிக விலை கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர். அந்த அளவு அதன் வசதிகளையும்,பயன்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.

உயர்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கும் பொழுது, கேமரா போன்ற வசதிகள் மட்டும் குறைவாக இருக்குமா என்ன? இதில் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இருக்கும். இதுவும் எதிர் பார்ப்பு தான். ஏனெனில் இந்த புத்தம் புதிய மொபைலை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் சில தகவல்கள் காற்றுவாக்கில் கசிந்துள்ளது. எந்த காட்சியையும் கண் குளிர காண இதில் 3.7 டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எளிதாக இயங்க துணை புரியும்.

இதில் யூஎஸ்பி போர்ட் வசதி உள்ளதால் கணினியில் இருந்து தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும். இன்டர்நெட் வசதியுடன் மொபைல்கள் வருவதும், வாங்குவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டதால் இதிலும் அந்த வசதிகளை பெற முடியும்.

இந்த மொபைல் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியை கொண்டிருப்பதால் கூடுதல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்போன்களை இணைத்துக்கொள்ளலாம்.

இதில் சுப்பீரியர் ஆடியோ மற்றும் எச்டிஎம்ஐ மூலம் சுப்பீரியர் வீடியோ வசதியினையும் பெறலாம். இந்த புதிய லுமியா-601 ஸ்மார்ட மொபைல் பற்றி விலை விபரங்கள் விரைவில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X