Home
Mobile

சிறந்த தொழில்நுட்பங்களுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super

சிறந்த தொழில்நுட்பங்களுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!
நவீன தொழில் நுட்பங்களையும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கொடுத்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இதன் புதிய படைப்பின் பட்டியலில் புது விருந்தினராக சேர இருக்கிறது மோட்டோலுக்ஸ். 123.6 கிராம் இலகு எடையை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோலக்ஸ் ஸ்மார்ட்போன்.

4.0 இஞ்ச் அகன்ற திரை வசதியை கொண்டுள்ள இந்த மோட்டோலுக்ஸ் ஸ்மார்ட்போன் டிஎப்டி தொடுதிரை வசதியினை பெற்றுள்ளது. மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா விரும்பிகளாக இருக்கும் எந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும் இந்த மோட்டோலக்ஸ் ஸ்மார்டபோனை நிச்சயம்

விரும்புவார்கள்.

இதன் ஆன்ட்ராய்டு வி2.3.7 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

இதில் 8 மெகா பிக்ஸல் கேமார கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. இதனால் குறையாத புகைப்பட குவியலை பெறலாம். ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இனிமையான தருணத்தை புகைப்படம் எடுக்க, மோட்டோலக்ஸ் மொபைல் இருந்தால் டிஜிட்டல் கேமராவினை தேட வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் அருமையான புகைப்படத்தினை பெறலாம். எத்தனை ஸ்வாரசியமான

சம்பவத்தினையும் இதன் வீடியோவில் அடக்கிவிடலாம். விரும்பிய போது அந்த வீடியோவினை பார்த்து ரசிக்கலாம்.

இதில் எக்ஸ்டர்னல் மெமரி ஸ்லாட் கார்டு வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். ஜிபிஆர்எஸ், எட்ஜ் மட்டும் அல்ல இன்னும் இதன் தொழில் நுட்பத்தினை கேட்டால் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த மோட்டோலுக்ஸ் ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

பொழுதுபோக்கு அம்சமாக இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சம் போன்ற விஷயங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் அதை சமாளிக்க சிறந்த எல்ஐ-அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளது இந்த மோட்டோலக்ஸ் ஸ்மார்ட்போனில் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினையும் பெற

முடியும்.

இந்த புதிய மோட்டோரலா மோட்டோலுக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலை கூடிய விரைவில் அறிவிக்கபப்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X